பக்கம் எண் :

சீறாப்புராணம்

1633


இரண்டாம் பாகம்
 

செய்கின்ற நீண்ட வேலாயுதத்தினாலும், வாளாயுதத்தினாலும், அம்பினாலுங் கொடுப்பதேயல்லாமல் யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாஜல்லஷகுனகு வத்த ஆலாவின் திருவருளின்பேரிற் சத்தியமாக உங்கள் பேரிற் சத்தியமாகத் துன்பமுறும்படி வேறொன்றையு மினிமையுடன் கொடுக்க மாட்டோமென்று சொன்னார்கள்.

 

4477. சினத்தொடும் படித்த வறிவொடு முரைத்த

         செய்கைகேட் டுவமையி லரசர்

     மனத்தினிற் களிப்புற் றரியயீ மானை

         வளர்த்தவ ராமெனப் புகன்று

     கனைத்தமும் மதவா ரணக்குல மேய்ந்த

         கத்துபான் குழுவின ரிடத்தி

     னினைத்துமுன் னுரைத்த வாய்மையை முறித்தார்

         நிசமுற வொருவரை யேவி.

39

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு கோபத்துடனுந் தாங்கள் கற்ற வுணர்வுடனுங் கூறிய செய்கையை ஒப்பற்ற வேந்தர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேள்வியுற்று இதயத்தின் கண் மகிழ்ச்சியடைந்து நீங்கள் அருமையான ஈமானை வளர்த்தவர்களாவீர்களென்று சொல்லித் துதித்து உண்மையுறும் வண்ணம் ஒரு அசுஹாபியை அனுப்பி ஆரவாரிக்கின்ற கன்னமதம், கைமதம், கோசமதமென்னு முவ்வகை மதங்களையுடைய யானைக் கூட்டத்தைப் போன்ற கத்துபான் கூட்டத்தார்களிடத்திற் ஆதியிற் கருதிச் சொல்லிய உண்மை வாசகத்தை முறித்தார்கள்.

 

கலிவிருத்தம்

 

4478. இசையும் வாய்மை முறித்தெழி லேந்திய

     வசையி லாப்புகழ் மன்னெனு மாநபி

     திசைவிண் ணேத்த விருந்தனர் தீனெறி

     யசற டுத்த பொழுது மடுத்ததால்.

40

     (இ-ள்) அழகைத் தாங்கிய களங்கமற்ற கீர்த்தியையுடைய வேந்தரென்று சொல்லும் பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு பொருந்திய உண்மை வாசகத்தை முறித்து எண்டிசைகளும் வானலோகமும் புகழும் வண்ண முறைந்தார்கள். தீனுல் இஸ்லாமென்னும்