இரண்டாம்
பாகம்
4633. வான
வர்க்கர செமக்குமுன் றோன்றினர் வரிசை
சேனை யின்றிரள்
செலவெழுந் துகளென மொழிந்தார்
கோனு வந்தவ ரதிசயித்
துளங்களி கூர்ந்தே
யூன மின்றியப் பனீகுறை
லாநக ருற்றார்.
12
(இ-ள்)
அவ்வாறு கேட்க, அதற்கு அவர்கள் தேவர்களான
மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியாகிய ஜிபுரீல்
அலைகிஸ்ஸலாமவர்கள் எமக்கு முன்னாக வந்து
செல்லுகின்றார். அவரது ஒழுங்கைக் கொண்ட சைனியத்தின்
கூட்டமானது நடக்க, அதனால் எழும்புகின்ற தூசியென்று
சொன்னார்கள். இராஜ நீதியை விரும்பிய அவர்கள் அதைக்
கேள்வியுற்று ஆச்சரியப்பட்டு மனதின்கண் சந்தோஷமானது
அதிகரிக்கப் பெற்று யாதொரு தீமையு மில்லாமல் அந்தப்
பனீக்குறைலாக்களின் நகரத்திற் போய்ச்
சேர்ந்தார்கள்.
4634. சென்ற
சேனையர் நபியருட் படியினாற் சினந்து
மன்றல் சேருமந் நகரினை
நெருங்குற வளைந்தார்
துன்று மந்நகர்க்
கிறைவர்க டுயர்மனத் துற்று
வென்றி மேவிய
கபீபினைக் கண்டுமே விளம்ப.
13
(இ-ள்)
அவ்வாறு போய்ச் சேர்ந்த சேனையோர்கள் நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
குறைஷிய்யாக் காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது
அருளின் வண்ணங் கோபித்து மணத்தைப் பொருந்திய அந்த
நகரத்தை நெருங்கச் சூழ்ந்தார்கள். அதனாற் செறிந்த
அந்நகரத்தினது தலைவர்கள் மனதின்கண் வருத்தமடைந்து
விஜயத்தைப் பொருந்திய ஹபீபென்னுங் காரணப்
பெயரையுடைய நம் நாயகம் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களைப் பார்த்துப் பேசும்படி.
4635. நயமி
குந்ததா னாபதி தமையவர் விடுத்தார்
தயவு கூர்தர முகம்மது
நபிசரண் சார்ந்தான்
வயமி குத்தஅ பாலுபா
னாவைமன் னருளால்
பயமி குத்தவெந்
நகருக்கென் னுடன்வரப் பணிப்பீர்.
14
(இ-ள்)
அவர்கள் மேன்மை யதிகரிக்கப் பெற்ற தானாபதியை
அனுப்பினார்கள். அவனுங் கிருபையானது மிகும் வண்ணம் நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது
ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல்
அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது
திருவடிகளைச் சார்ந்து வலிமையானது மிகப்பெற்ற
அபாலுபானா வென்பவரை நீங்கள் உங்களது நிலைபெற்ற
காருண்ணியத்தினால் அச்சமானது மலிந்த எங்களது
நகரத்திற்கு என்னோடு வரும்படிக் கட்டளை செய்வீர்கள்.
|