இரண்டாம்
பாகம்
4636. இருவ
ருமெங்கள் பனீகுறை லாவிடம் புகுந்து
பெருமை யாகிய மொழிசில
பேசுதல் பேசிக்
கரும முற்றியா மீள்குவ
மெனவு வன் கழறப்
பருவ ரலுறா தபாலுபா
னாதமைப் பணித்தார்.
15
(இ-ள்)
நாங்களிருவர்களும் எங்களது பனீக்குறைலாக்கள்பாற்
சென்று பேசவேண்டிய பெருமையான சில வார்த்தைகளைப்
பேசிக் காரியத்தை முடித்துக் கொண்டு யாங்கள் திரும்பி
வருவோ மென்று அவன் சொல்ல, அவர்களும் அருவருப்படையாது
அவ்வபாலுபானா றலியல்லாகு அன்கு அவர்களை அவ்வாறு
போகும்படிக் கட்டளை செய்தார்கள்.
4637. வண்மை
மிக்கஅ பாலுபா னாபனீ குறைலா
தண்மை பெற்றவந் நகரிடை
சார்ந்திடக் கண்டு
பெண்மை மிக்கவ
ரிளையர்க ளியாவரும் பெருத்த
கண்ம லர்ப்புனல்
சொரிதர வழுதுளங் கரைந்தார்.
16
(இ-ள்)
அவ்வாறு கட்டளை செய்ய, கீர்த்தி மிகுந்த அந்த
அபாலுபானா றலியல்லாகு அன்கு அவர்கள் அந்தப்
பனீக்குறைலாக்களின் தாழ்வைக் கொண்ட அந்த
நகரத்தின் கண் செல்ல, அதைப் பெண் தன்மை
யதிகரித்தவர்களும் சிறுவர்களுமாகிய யாவர்களும்
பார்த்துப் பெருமையாகிய விழிகளான தாமரைப் புஷ்பமானது
நீரைச்சிந்தும் வண்ணம் அழுது மனமானது கரையப்
பெற்றார்கள்.
4638. அழுதல்
கண்டவர்க் கன்னவ ரன்புமிக் கானார்
குழுவ தாய்நிறை பனீகுறை
லாமதி கூர்ந்து
பழுதி லாநபி தமைக்கண்டு
நல்லுரை பகர்ந்து
வழுவி லாமொழி
கேட்டவர்க் காளென வாழ்வோம்.
17
(இ-ள்)
அவ்வாறு அழுவதை அந்த அபாலுபானா றலி யல்லாகு அன்கு
அவர்கள் பார்த்து அவர்கள் மீது மிகக் கிருபை
உடையவரானார்கள். உடனே கூட்டமாக நிறைந்த பனீக்குறைலா
வென்பவர்கள் அறிவானது அதிகரிக்கப் பெற்று யாங்கள்
குற்றமற்ற அந்நபிகட் பெருமானா ரவர்களைப் பார்த்து
நன்மை பொருந்திய வார்த்தைகளைப் பேசி அவர்களது
களங்கமற்ற வார்த்தைகளைக் கேள்வியுற்று அவர்களுக்கு
அடிமைக ளென்று சொல்லும் வண்ணம் வாழ்ந்து வருவோம்.
4639. என்ன
கூறலுங் கேட்டவ ரிசைந்துநீர் நபிபாற்
சென்று கண்டடி தொழுதுதீன்
வழிபட றிறனா
மன்றி யுங்களுக்
கருள்செய் வுவந்திடா ரடர்ந்து
கொன்று தீர்குவ
ரென்றனர் கோதறு மனத்தார்.
18
|