பக்கம் எண் :

சீறாப்புராணம்

1684


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) என்று சொன்ன மாத்திரத்தில், அதைக் குற்றமற்ற இதயத்தை யுடையவர்களான அந்த அபாலுபானா றலி யல்லாகு அன்கு அவர்கள் கேள்வியுற்று நீங்கள் மனமிணங்கி நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்திற் போய் அவர்களைப் பார்த்து அவர்களது பாதங்களில் வணங்கித் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்திற்கு வழிப்படுவது மேன்மையாகும். அல்லாமல் அவர்கள் உங்களுக்குக் கிருபை செய்ய நாட மாட்டார்கள். நெருங்கி உங்களை வெட்டிக் கொலை செய்வார்களென்று சொன்னார்கள்.

 

4640. அன்ன வாசக நினைந்துநாம் நபிமொழி யன்றி

     முன்ன மேபய முற்றவர் தங்களை முனிந்து

     பின்ன மாய்கொடுங் கொலைசெய்வ ரெனவுரை பேச

     னன்ன யத்ததன் றென்றுள நாணமுற் றெழுந்தே.

19

     (இ-ள்) அத்தன்மையாகச் சொல்லிய அந்த வார்த்தைகளை மறுபடியு மெண்ணி நாம் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது உத்தரவல்லாமல் ஆதியிலேயே அச்சத்தை யடைந்திருக்கின்ற இந்தப் பனீக்குறைலாக்களைக் கோபித்துப் பின்னமாகக் கொடிய கொலை செய்வார்களென்று சொன்ன வார்த்தை நல்ல நயத்தை யுடையதன்று, என்று சொல்லி மனமானது வெட்க மடையப்பெற்று எழும்பி.

 

4641. வந்து நின்றிடும் பனீகுறை லாவொடு மொழியா

     தந்த மிஞ்சிய நபியிடத் தணுகவு நாணிக்

     கந்த முங்கிய செழுமலர்க் கான்மதுத் துளிகள்

     சிந்து சோலைசூழ் மதீனத்துப் பள்ளியிற் சேர்ந்தார்.

20

     (இ-ள்) தங்கள் சமுகத்தில் வந்து நிற்கின்ற அந்தப் பனீக் குறைலாக்க ளோடும் பேசாமல் அழகானது அதிகரிக்கப் பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்தில் வருவதற்கும் வெட்கமுற்று வாசனை நிறைந்த செழிய தாட்களை யுடைய புஷ்பங்கள் மதுவாகிய திவலைகளைப் பொழிகின்ற சோலைகள் வளைந்த திரு மதீனமா நகரத்தினது பள்ளியின் கண் வந்து சேர்ந்தார்கள்.