பக்கம் எண் :

சீறாப்புராணம்

1685


இரண்டாம் பாகம்
 

4642. நாணும் பொய்யுரைப் பிழையினாற் பள்ளியி னடுவோர்

     தூணிற் சார்ந்தனம் வனமுணா தேழுநாட் சுருதி

     பூணு நேயத்தோ டுறுந்துஆ விரந்திடும் போதிற்

     காணு மாயத்தொன் றிறங்கிய தெழில்கபீ பிடத்தில்.

21

     (இ-ள்) வெட்குகின்ற பொய் வார்த்தையினது குற்றத்தினால் அவ்வாறு சேர்ந்து அப்பள்ளியினது மத்தியில் ஒரு தூணின் மீது சாய்ந்து ஏழு நாள் வரை அன்னமும் நீரு மருந்தாமல் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தைப் பூண்ட நேயத்தோடும் பொருந்திய துஆவை யிரந்த சமயத்தில், அழகிய ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்பால் தோன்றா நிற்கும் ஓராயத்தான திறங்கிற்று..

 

4643. தீது றும்படி றன்றவ ருரைத்தது திடமென்

     றாதி நாயகன் மறைமொழி வந்ததாய்ந் தறிந்து

     காத லாந்தவு பாக்கபூ லாயதென் றெண்ணிக்

     கோதி லாமனத் திருத்தினர் நபியருள் கூர்ந்தே.

22

     (இ-ள்) அந்த அபாலுபானா றலியல்லாகு அன்கு அவர்கள் சொன்னது தீமை மிகுத்த பொய் யன்று, உண்மைதா னென்று யாவர்க்கும் முதன்மையனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனமானது அவ்வாறு வந்தது. அதை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் ஆராய்ந்து உணர்ந்து ஆசையைக் கொண்ட அவரது தௌபா கபூலாயிற் றென்று அன்பானது அதிகரிக்கப் பெற்றுக் களங்க மற்ற தங்க ளிதயத்தின் கண் இருக்கச் செய்தார்கள்.

 

4644. எள்ள ருந்திற லபாலுபா னாவின்ன தாக

     வுள்ள நொந்தந்த பனீகுறை லாவொருங் கீண்டிக்

     கள்ள மின்றியே கபீபிற சூலினைக் கண்டு

     விள்ள ருந்துயர் கூறிட மீண்டுமாள் விடுத்தார்.

23

      (இ-ள்) நீக்குதற் கருமையான வலிமையை யுடைய அபாலுபானா றலியல்லாகு அன்கு அவர்கள் இத்தன்மையாக, அந்தப் பனீக்குறைலா வென்பவர்கள் மனமானது வருந்தப் பெற்று ஒன்றாகக் கூடி ஹபீ பென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்