பக்கம் எண் :

சீறாப்புராணம்

1686


இரண்டாம் பாகம்
 

குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் பார்த்துச் சொல்லுதற் கரிய தங்களது துன்பங்களைக் கபடமில்லாமல் சொல்லுதற்கு மறுபடியும் ஆளனுப்பினார்கள்.

 

கலிவிருத்தம்

 

4645. இனியசீர் முகம்மதை யிறைஞ்சித் தூதுவன்

     பனீநலி றுகளைமுன் வந்த வாண்டினி

     னனிநக ரகன்றுகா னணுகு வீரெனுந்

     துனியறு மொழியெம்பாற் சொல்ல வேண்டுமே.

24

     (இ-ள்) அவ்வாறு அனுப்பப்பட்ட அந்தத் தூதன் வந்து இனிமையான கீர்த்தியையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் பணிந்து முன்னர் வந்த வருடத்தில் பனீ நலிறென்பவர்களைப் பெருமை பொருந்திய நகரத்தை விட்டும் நீங்கிக் காட்டின் கண் செல்லுவீர்க ளென்று சொன்ன அச்சமற்ற வார்த்தையை நீங்கள் எங்களிடத்திற் சொல்ல வேண்டும்.

 

4646. உடுத்திடும் புடவையொன் றொழிந்தி யாவையுங்

     கொடுத்துயர் வனங்குடி கொள்ளு வோமெமை

     விடுத்திடு மென்றவன் விளம்ப வேநபி

     தடுத்தவர்க் கிவ்வுரை சாற்று வாரரோ.

25

      (இ-ள்) நாங்க ளணிந்திருக்கும் ஆடையொன்றே யல்லாமல் மற்ற எல்லாவற்றையும் உங்களிடத்துத் தந்து விட்டு ஓங்கிய காட்டை எங்களுக்கு உறை விடமாகக் கொள்ளுவோம். நீங்கள் எங்களை விட்டு விடுங்களென்று அவன் சொல்ல, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அதை விலக்கி அவர்களுக்கு இந்த வார்த்தையைச் சொல்லுவார்கள்.

 

4647. யாவரும் புகழிசு லாமில் வந்துநீர்

     மேவிய பொழுதல்லால் விடுவ தில்லெனத்

     தாவரும் வாய்மொழி சாற்றச் சாரணன்

     மாவலாய் நாங்களீ மானி னண்ணலேம்.

26

      (இ-ள்) நீங்க ளனைவர்களும் கீர்த்தியைக் கொண்ட தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தில் வந்து சேர்ந்த போதன்றி நாங்கள் உங்களை விடுவதில்லை யென்று தாண்டுதற் கருமையான