பக்கம் எண் :

சீறாப்புராணம்

1687


இரண்டாம் பாகம்
 

வாயினிடத் திருந் துண்டாகாநிற்கும் வார்த்தையைச் சொல்ல, அந்தத் தூதுவன் பெருமை பொருந்திய வலிமையை யுடையவர்களே! நாங்கள் ஈமானில் வந்து சேரமாட்டோம்.

 

4648. செய்தகை காண்குவோஞ் சித்த மென்றவ

     னுய்திற மின்றியே யுரைக்க அவ்விடத்

     தெய்திய பனீயவு சிவர்க ணட்பினாற்

     பைதலுற் றிவ்வுரை பகர்த லாயினர்.

27

      (இ-ள்) நீங்கள் செய்கின்ற தன்மையை நாங்கள் காண்கின்றோம். உங்களது சித்த மென்று அந்தத் தூதன் பிழைக்குந் தன்மையில்லாது சொல்ல, அங்கே போயிருந்த பனீ அவு சென்பவர்கள் இவர்களது சினேகத்தினால் துன்பமடைந்து இந்த வார்த்தையைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

வேறு

 

4649. ஈர மிக்க நபியைத் தொழுதெம்பால்

     வார முற்ற பனீகுறை லாக்கள்செய்

     நேர மெங்களுக் காகப் பொறுத்தருள்

     கூரு மாவி கொடுத்திடு மென்னவே.

28

      (இ-ள்) அன்பு மிகுத்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா  செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை வணங்கி எங்கள் மீது அன்புற்ற பனீக்குறைலாக்கள் செய்த குற்றத்தை எங்களுக்காக மன்னித்து அவர்கள் மீது கிருபை செய்யுங்கள். அவர்களது பிராணனை யருளுங்களென்று.

 

4650. பாங்கு நின்றிவர் கேட்ட பரிசினாற்

     றாங்கு கீர்த்தி நபியுமித் தன்மையை

     யோங்கு முங்கள் கிளையி லொருவர்பா

     னீங்கி லாத நெறியி னிகழ்த்துவோம்.

29

      (இ-ள்) இவர்கள் பக்கத்தில் நின்று கேட்ட பண்பினால் கீர்த்தியைத் தரித்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் இந்தத் தன்மையை ஓங்கா நிற்கும் உங்களது குடும்பத்திலுள்ள ஒருவரிடத்து நீங்காத ஒழுங்கோடுஞ் சொல்லுவோம்.

 

4651. ஓது மன்னவர் சொல்லெமக் குண்மையாய்ப்

     போது முங்கட்கும் போதும தோவெனக்

     காத லாயவர் கொள்ளம ஆதுசொல்

     லேதில் சஃதொடு சாற்றுவ மென்றனர்.

30