பக்கம் எண் :

சீறாப்புராணம்

1741


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு கொடுக்க, யாங்கள் வாலிபமும் அழகும் செல்வத்தினது தகுதியும் உறவும் மேலான வளமையும் பொருந்தி ஆதிகாலத்தில் சந்தோஷித்து இனிமையோடுங் கிருபையாய் வாழ்ந்திருந்தோம். மனமானது மகிழ்ச்சியடைகின்ற புத்திரர்கள் பிறந்து எங்களுக்குச் சொந்தமான வாலிபமு மகன்று கணக்கிடுதற்கு அருமையான எங்களது வாழ்வுங்கெடும் வண்ணம் வாடின பின்னர்.

 

4787. சீற்றமும் பகையும் பொல்லாச் செய்கையு மன்றி வேறு

     மாற்றமொன் றுரையா தில்லின் வருந்தொறும் புலிபோற் சீறிக்

     கோற்றொடி யாரை நோக்கிக் கொழுநர்க ளொருகா லத்துஞ்

     சாற்றரு முறைகொண் டென்னைத் தாயென வுரைத்தார் மன்னோ.

7

     (இ-ள்) எனது நாயகர் கோபமும் விரோதமும் பொல்லாத செய்கைகளுமேயல்லாமல் வேறு ஒரு பேச்சும் பேசாமல் வீட்டினிடத்து வரும்போதெல்லாம் புலிபோற் கர்ச்சித்து அழகிய வளையல்களையுடைய மனைவிமார்களைப் பார்த்துப் புருடர்கள் ஒரு காலத்திலுஞ் சொல்லுதற்கு அருமையான முறையைக் கொண்டு என்னைத் தாயென்று சொன்னார்.

 

4788. ஆதலா லவரு மென்னை யகன்றன ரவரை நானுந்

     தீதுற வகன்றேன் பெற்ற சிறுவரும் பசியான் மிக்குப்

     பேதுற வடைந்து நொந்து பிதாவென வடுத்தா லுள்ளக்

     காதலாற் புரவா ரியானுங் காக்கவோர் வகையு மற்றேன்.

8

     (இ-ள்) ஆதலினால் அவரும் என்னை விட்டு நீங்கினார். யானுங் களங்கமுறும் வண்ணம் அவரை விட்டு நீங்கினேன். யாங்கள் பெற்ற புத்திரர்களும் பசியினால் மிகவும் மதிமயக்கமடைந்து வருந்திப் பிதாவென்று அவரைப்போ யடுத்தால் இதயத்தினது அன்போடும் அவர்களைக் காக்க மாட்டார். யானும் அவர்களைக் காப்பதற்கு ஒருவகையுமில்லாம லாயினேன்.

 

4789. மைந்தர்க டுயர மென்றன் வருத்தமு மவர்சூழ் சொன்ன

      பந்தம மகல யாங்கள் பண்டுபோ லிருந்து வாழத்

      தந்திர முளவோ வென்றாள் நபியவ டன்னை நோக்கிக்

      கொந்தலர் குழலா யெம்மாற் கூட்டுத லரிய தென்றார்.

9

      (இ-ள்) ஆனதினால் எங்கள் புத்திரர்களது துன்பமும் என்றன் துன்பமும் அவர் கூறிய சபதமாகிய கட்டும் அகலவும், யாங்கள் முன் போலிருந்து வாழவும், யாதாவது தந்திரமுள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி