இரண்டாம்
பாகம்
4893. தேற்றமுற
நாயினெடு நாத்திகழு நீரை
மாற்றமற வுண்ணவரு மானுடல் பிறந்த
காற்றினை யருந்தும்விட கட்செவியின் வாயைத்
தோற்றுபுழை யென்றெலி சுழன்றுசெல வெண்ணும்.
95
(இ-ள்) அன்றியும், நாயினது நெடிய
நாவினிடத்துத் தெளிவுறப் பிரகாசியா நிற்கும் நீரை
மான்கள் வேற்றுமை யறும் வண்ணம் அருந்துவதற்கு வரும்.
அம்மானினது சரீரத்தின் கண் ணுண்டாகிய காற்றை
யுண்ணுகின்ற விஷத்தையுடைய கண்ணுங்காது மொன்றான
சர்ப்பத்தினது வாயை எலிகள் தோற்றுகின்ற புழையென்று
சுழன்று அப்புழையின் மீது போவதற்கு நினையா நிற்கும்.
4894. சிந்துபுனல் வாரிபுடை
சேர்த்துமித னாலே
யிந்தநில நாலுவகை யாகியதி ருந்த
வந்தரமு மிவ்வழலை யாற்றவரி தாகிக்
கந்தரமு மிக்கபுனல் கங்கையு மடுத்த.
96
(இ-ள்) அன்றியும், இந்தப் பூமியானது
ஆறுகளையும் நீரையுடைய சமுத்திரத்தையும் பக்கங்களிற்
சேர்த்தும் இப்பாலை நிலத்தினால் நாலு வகையாயிருந்தது.
ஆகாயமும் இந்த வெப்பத்தைப் பொறுக்க முடியாததாகி
மேகங்களையும், மிகுத்த நீரைக் கொண்ட கங்கையையு
மடுக்கப் பெற்றது.
4895. பரக்குமெளி
யர்க்கருள் பகுத்தருள நெஞ்சி
லிரக்கமறு லோபிய ரிடத்திலுறு வார்போல்
சுரத்தழல் வருத்தவடி துன்னவரு முன்ன
மரத்தினை யடுத்துளம் வருந்திமெலி வோரும்.
97
(இ-ள்) அன்றியும், பரவிய எளியோர்க்குக்
கிருபையோடும் திரவியங்களைப் பாகித்துக் கொடுக்க,
இதயத்தின் கண் இரக்கமற்ற உலுத்தரிடத்திற்
செல்வோர்களைப் போல, அந்தப் பாலை நிலத்தினது
அழலானது வேதனை செய்ய, அவ்வேதனையானது பாதங்களை நெருங்க
வருவதற்கு முன்னர் மரங்களை நெருங்கி மனமானது துன்புற்றுச்
சோர்வோர்களும்.
4896. ஊறுபுன னாவற வுலர்ந்துபசை
யற்றுச்
சாறுகள் பிழிந்துசிலர் தாம்பருகு வாருங்
கூறுமிரு காலின்மிசை கொப்புள நிரம்பத்
தூறுகண் மிதித்தடி துடித்துழலு வாரும்.
98
(இ-ள்) சிலர் சுரக்கின்ற நீரையுடைய
நாவானது மிகவுங் காய்ந்து பசையற்றுச் சாறுகளைப்
பிழிந்து அருந்துவோர்களும், சொல்லா நிற்கும்
இருபாதங்களின் மீதுங் கொப்புளங்கள் நிரம்பச்
|