இரண்டாம்
பாகம்
சிறிய
செடிகளை மிதித்து அடிகள் துடிக்கப் பெற்றுச்
சுழல்வோர்களும்.
4897. இவ்வணம்
வருத்தமிக வெய்தியற லின்றி
மெய்வணம் வருத்திமிக வெய்துற வுலைந்தே
யுய்வண நபிக்குமு னுரைப்பது நமக்கே
செய்வண மெனப்பலர் திரண்டவ ணடைந்தார்.
99
(இ-ள்) இந்தப் பிரகாரம் மிகவுந்
துன்பமடைந்து தண்ணீரில்லாமற் சரீரத்தினது அழகானது
மெலிந்து அதிகமாக வெப்பமுறும் வண்ண முலைந்து நாம்
அனைவரும் பிழைக்கும்படி நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில்
ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது சந்நிதானத்திற்
சொல்லுவதே நமக்குச் செய்யவேண்டிய செயலென்று பல
அசுஹாபிமார்களொன்று கூடி அங்கு வந்து சேர்ந்தார்கள்.
4898. வந்துநபி
யைத்தொழுது வாழ்த்தியடி யேமு
வந்தபுன றேடியரைக் காதவழி சுற்றி
லிந்தநில மீதிலரி தெங்கடமக் கும்பா
லந்தமுறும் பாத்திர மமர்ந்தபுன லல்லால்.
100
(இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்து நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை
வணங்கித் துதித்து எங்களுக்கு உங்களிடத்தில் அழகைப்
பொருந்திய பாத்திரத்திலிருக்கின்ற
தண்ணீரேயல்லாமல் எளியேங்களாகிய யாங்கள் விரும்பிய
தண்ணீரைத் தேடி எங்களுக்கு அரைக்காதவழி சுற்றிலும்
இந்தப் பாலைநிலத்தின் கண் கிடைப்பது அரிதாயிற்று.
4899. என்றவ
ரடங்கலு மிரைந்துமொழி கூற
நன்றென நினைந்துநபி நன்மொழி பகர்ந்தே
வென்றிதரு பாத்திரம் விரைந்துகொடு வந்தென்
முன்றருதி ரென்றவர் மொழிந்துள மகிழ்ந்தார்.
101
(இ-ள்) என்று அவர்களியாவரும்
சத்தமிட்டுச் சொல்ல, நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது
முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் நல்லதென்று சிந்தித்து
அவர்களுக்கு நல்ல வார்த்தைகளைச் சொல்லி விஜயத்தைத்
தருகின்ற அந்தப் பாத்திரத்தை வேகமாய்க் கொண்டு
வந்து எனது
|