பக்கம் எண் :

சீறாப்புராணம்

1779


இரண்டாம் பாகம்
 

முன்னர்த் தாருங்களென்று சொல்லி அவர்கள் தங்களிதயமானது மகிழ்ச்சியடையப் பெற்றார்கள்.

 

4900. சொன்னபொழு தேகடிகை தன்னையொரு தூதன்

     மன்னுமறை மாநபிமுன் வைத்தகல நின்றான்

     றென்னுலவு பங்கய மலர்க்கைகொடு தீண்ட

     வந்நவமெ னப்புனல்க ளானவிர னான்கும்.

102

      (இ-ள்) அவ்வாறு அவர்கள் சொன்ன அந்தச் சமயத்தில், ஒரு தூதன் நிலைபெற்ற புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது சந்நிதானத்தில் அந்தப் பாத்திரத்தை வைத்துத் தூரத்தில் நின்றான். அவர்கள் அழகானது உலாவா நிற்குந் தங்களது தாமரை மலரைப் போன்ற கையினால் அதைத் தொட, அழகிய அற்புதமென்று சொல்லும் வண்ணம் அந்தக் கையினது விரல்கள் நான்கிலுந் தண்ணீர்களுண்டாயின.

 

4901. பாலைவன மெங்குநிறை பானியம தாக

     மேலவனை யுன்னியுள மீதினி லிருத்திச்

     சீலநபி பாதமிசை சென்னிகொடு சேர்த்தி

     யாலமமு தாகவசு காபிக ளயின்றார்.

103

      (இ-ள்) அவ்வாறு அந்தப் பாலைவனத்தினது இடங்களெல்லாவற்றிலும் நிறைந்த நீரானது உண்டாக அசுஹாபிமார்கள், யாவருக்கும் மேலானவனான அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவை நினைத்து மனதின் கண்ணிருக்கும்படி செய்து நற்குணத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது திருவடிகளின் மீது தங்கள் தலைகளைக் கொண்டு போய்ப் பொருத்தி வணங்கி அந்தத் தண்ணீரை அமுதமாகச் சாப்பிட்டார்கள்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4902. வாசியுங் களிறு மேறும் வரிநெடுங் கழுத்தன் மற்றுங்

     காசறப் புனலு முண்டு களித்தெழுந் தார்த்துப் பொங்க

     நேசமுற் றஸ்காபி மார்க ணெடுநெறி யதனிற் செல்ல

     வீசிய புகழ்சேர் வள்ளல் விருப்பமுற் றெழுந்து போனார்.

104

      (இ-ள்) அன்றியும், குதிரைகளும் யானைகளும் எருதுகளும் சுரிப்பைக் கொண்ட நீண்ட கழுத்தையுடைய ஒட்டகங்களும்