பக்கம் எண் :

சீறாப்புராணம்

1780


இரண்டாம் பாகம்
 

பிறவும் குற்றமற நீரையருந்தி மகிழ்ந்து எழும்பிச் சத்தித்துப் பொங்கவும், அசுஹாபிமார்கள் அன்புற்று நீண்ட பாதையின் கண் போகவும், எவ்விடத்தும் பரவிய கீர்த்தியைப் பொருந்திய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பிரியமுற்று எழும்பிச் சென்றார்கள்.

 

4903. அடவியுங் குன்று மாறு மருவியு மகன்று பின்னர்

     மடிவிலா வுதுமா னென்னும் வள்ளலை யினிது கூவித்

     துடவைசூழ் மக்க மென்னுந் தொன்னகர்க் கேகு மென்னப்

     படிபுகழ்ந் தேத்த வன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார்.

105

      (இ-ள்) அவ்வாறு சோலைகளையும் மலைகளையும் நதிகளையும் ஆறுகளையும் நீங்கிச் சென்று அப்பால் சோம்புதலில்லாத உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு என்று சொல்லும் வள்ளலவர்களை இனிமையோடுங் கூப்பிட்டு நீங்கள் சோலைகளால் சூழப்பட்ட திரு மக்கமென்று சொல்லும் பழமையான நகரத்திற்குப் போகுங்களென்று சொல்ல, அவர்கள் இவ்வுலகமானது துதித்துப் புகழவும் அன்பானது பொருந்தவும் சந்தோஷித்துப் போனார்கள்.

 

4904. விரிகடற் சேனை சூழ விரைந்தெழுந் தேகிச் சீத

     வரைசெறி மதீன மூதூர் வளநக ரடுக்கும் போதிற்

     தரைபுகழ் மக்கந் தன்னிற் றகைபெறு முதுமா னென்னுங்

     குரைகழற் கோவைக் கொன்றா ரெனுமொழி பிறந்த தன்றே.

106

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு போக, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விரிந்த சமுத்திரத்தைப் போன்ற சைனியங்கள் தங்களை வளைந்து வரும் வண்ணம் வேகமாயெழும்பிச் சென்று குளிர்ச்சி பொருந்திய மலைகள் நெருங்கிய திரு மதீனமென்னும் பழமையான ஊராகிய செல்வத்தையுடைய நகரத்தைச் சமீபித்த சமயத்தில், இப்பூமியானது புகழா நிற்குந் திரு மக்கமா நகரத்தில் மேன்மை பெற்ற உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு என்று சொல்லும் ஒலிக்கின்ற வீரக்கழலைத் தரித்த அரசரவர்களைக் கொலை செய்தார்களென்ற வார்த்தையானது துண்டாயிற்று.