பக்கம் எண் :

சீறாப்புராணம்

1782


இரண்டாம் பாகம்
 

வசனங்களையுடைய மோட்சத்தைத் தருகின்ற புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தையும் ஹபீபு என்னுங் காரணப் பெயரையுமுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேள்வியுற்று அன்பாகிப் பெரிய சேனையை ஜெயிக்கின்ற வேலாயுதத்தையுடைய அசுஹாபிமார்களே! பூவரும்புகள் ஒழியாதிருக்கின்ற அகழியைக் கொண்ட அழகிய கோட்டை மதிலையுடைய திருமக்கமா நகரத்தின் கண் எழுந்து செல்லுவீர்களாக வென்று சொல்லி அதற்குடன்படுகின்ற சமயத்தில்.

 

4908. மறையுண ருதுமா னென்னு மன்னவ ரிறத்தல் பொய்யென்

     றறைதரு வசனங் கேட்டங் ககமகிழ்ந் திருந்த பின்னர்

     நிறைதரு வாய்மைப் பாடு நிகழ்த்தின பேர்கட் கெல்லாம்

     மிறையவ னருளி னாலே யாயத்தொன் றிறங்கிற் றன்றே.

110

      (இ-ள்) புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுணர்ந்த உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு என்று சொல்லும் அரசரவர்கள் இறந்தது பொய்யென்று சொல்லிய வார்த்தையைக் கேள்வியுற்று அவ்விடத்தில் மனமானது மகிழ்ச்சியடையப் பெற்றிருந்த சமயத்தில், பூரணமாகிய சத்திய வசனத்தைச் சொன்ன அசுஹாபிமார்க ளனைவர்களுக்கும் யாவருக்குங் கடவுளான அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் காருண்ணியத்தினால் ஓர் வேதவசனமான திறங்கிற்று.

 

4908. வந்தவா யத்தைத் தேர்ந்து தீனவர் வதன நோக்கிப்

     பந்தனை வாய்மை யெற்குப் பகர்ந்ததூ யோர்க ளெல்லாம்

     விந்தைசே ருவனை மீதின் மேவுவர் நிறைய மில்லென்

     றந்தமி லிறைவன் றூத ரறைந்தன ருளங்க னிந்தே.

111

      (இ-ள்) இறுதியில்லாத கடவுளான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு வந்த அந்த வேதவசனத்தை யுணர்ந்து தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்களது முகத்தைப் பார்த்து எனக்குக் கட்டுப்பாடான உறுதி வாக்கியத்தைச் சொன்ன பரிசுத்தத்தையுடையோர்களியாவரும் அற்புதத்தைப் பொருந்திய சொர்க்கலோகத்தின் கண் போய்ச் சேர்வார்கள். அவர்களுக்கு நரகமில்லையென்று மனங்கனிந்து சொன்னார்கள்.