இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவ்வாறு பொருந்த, யுத்தத்தினாற்
பொருது அடர்ந்து தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்தின் ஒழுங்கைக் கொண்ட புறுக்கானுல்
மஜீதென்னும் வேதத்திற் பொருந்தி நல்ல
சன்மார்க்கத்தில் வந்த முஸ்லிங்களுக்கு எட்டுப்பங்
கதிகமாக அன்பினால் தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்திற் போய்ச் சேர வேண்டுமென்று
சொல்லுந் தன்மையினால் அருமையான திண்ணிய
வலிமையையுடைய வீரர்கள் வந்தார்கள். அவர்களில்.
4915. ஊன்கி
டந்தவேற் கரனொல துதவுகா லிதுவு
மான்கி டந்தமை விழிமின்னார் மால்கொளும் அமுறுங்
கான்கி டந்தமா லிகையபீத் தாலிபுக் கையிலு
மான்கி டந்தகைத் தலத்தல்கா வருளுது மானும்.
4
(இ-ள்) மாமிசமானது கிடக்கப் பெற்ற
வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய ஒலீதென்பவன்
இவ்வுலகத்தின் கண் தந்த காலிதென்பவனும் மான்போலுங்
கிடந்த மையெழுதிய கண்களையுடைய பெண்கள் மையல்
கொள்ளுகின்ற அமுறென்பவனும், வாசனையானது கிடக்கப்
பெற்ற புஷ்பமாலையைத் தரித்த அபீத்தாலிபுக்
கையிலென்பவனும், காமதேனுவைப் போலுங் கிடந்த
கைத்தலத்தையுடைய தல்காவென்பவன் பெற்ற
உதுமானென்பவனும்.
எழுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
4916. வரியளி
யலம்பிப் பெடையொடுந் துயிலு
மரவமுங் கியபுய நபிதங்
குரைகழற் பதத்தில் விழியிணை வைத்துக்
கொழுமணி யனையவாய் முத்திக்
கரையிலா வுவகைக் கடலிடை குளித்துக்
கரும்பெனு மறைக்கலி மாவை
யுரைதர வோதி தீனிலை நின்றார்
நால்வர்க டவத்தினி லுயர்ந்தோர்.
5
(இ-ள்) ஆகிய தவத்தி லுயர்ந்தவர்களான
நால்வர்களும் இரேகைகளைக் கொண்ட வண்டுகள் தங்கள்
பெட்டை வண்டுகளோடுஞ் சத்தித்துத் துயிலா நிற்குங்
குங்குமப் புஷ்பத்தினாலான மாலைகள் முங்கிய
தோள்களையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா
அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களது சத்திக்கின்ற
வீரக்கழலைத்தரித்த பாதத்தின் கண் இரு கண்களையும்
வைத்துச் செழிய பவளத்தைப் போன்ற வாயினால்
முத்தமிட்டு எல்லையற்ற சந்தோஷக் கடலில் மூழ்கிக்
கரும்பென்று சொல்லும்
|