பக்கம் எண் :

சீறாப்புராணம்

1787


இரண்டாம் பாகம்
 

4919. ஒருகுடங் கவரி சோக முள்ளவை சாய்த்துக் கொண்டு

     தருவுறை காபா வென்னுந் தலத்திடை தன்னின் மேய்த்து

     வருவிர்க ணீவி ரென்று மறைகிடந் தலம்பும் வாயாற்

     றிருவுளம் பற்றி னாரிம் மூவருஞ் சென்னி தாழ்த்தார்.

8

      (இ-ள்) நீங்கள் ஒப்பற்ற பசுக்கள், எருமைகள், ஒட்டகங்களாகிய உண்டான இவைகளைச் சாய்த்துக் கொண்டு விருட்சங்கள் தங்கிய காபாவென்று சொல்லுந் தானத்தின் கண் மேய்த்து வாருங்களென்று புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது கிடந்து அலம்புகின்ற வாயினால் திருவுளம் பற்றினார்கள். உடனே இந்த மூன்று பேர்களும் தங்களது தலைகளைத் தாழ்த்திப் பணிந்தார்கள்.

 

4920. தொடைமழை பொழியும் விற்றோட் டுணைவர்க ளிருவர் சூழக்

     கடைமணிக் கலினப் பாய்மாக் காவலர் சல்மா வென்னு

     மடைசெறி கடகத் தோளார் வரிசிலை யொன்று தாங்கி

     யுடைகட லனைய காலே யம்முட னுவந்து போந்தார்.

9

      (இ-ள்) அவ்வாறு பணிந்து கடைகளிற் மணிகளைக் கொண்ட கடிவாளத்தைப் பெற்ற பாய்ந்து செல்லுகின்ற குதிரையுடைய அரசராகிய சல்மா றலியல்லாகு அன்கு என்று சொல்லுங் கடைப்பூட்டு செறிந்த கடகத்தையணிந்த தோள்களையுடையவர்கள் ஒரு நீண்ட வில்லைச் சுமந்து கொண்டு மாலைகள் மதுவாகிய மழையைப் பொழிகின்ற வில்லைத் தரித்த தோள்களையுடைய நேசர்கள் இருவர்களுந் தங்களைச் சூழ்ந்து வரும் வண்ணம் உடைந்த சமுத்திரத்தைப் போன்ற பசுக் கூட்டங்களோடு மகிழ்ந்து சென்றார்கள்.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4921. திரைநுகர் கருஞ்சூற் கனங்கிடந் தலறத்

          திகைத்தெழும் பிடிமடி சுரந்த

     புரைசுரை சுவைத்துப் பால்வெடி மறாத

          புனிற்றிளங் கன்றுமேய்ந் துறங்கும்

     வரைபல விறப்ப வுளிகுடைந் தறுத்த

          வட்டவா யுரற்றலைக் கேழற்

     பொருகளி றுழக்க விரிகரங் கரிகள்

          போந்திடும் வனங்களுங் கடந்தார்.

10

      (இ-ள்) அவ்வாறு போன அவர்கள் சமுத்திரத்தின் நீரை யருந்திய சூலைக் கொண்ட கரிய மேகமானது கிடந்து முழங்க, அதனாற் பிரமித்து எழும்பா நிற்கும் பெட்டையானைகளின் மடியிலூறிய துவாரத்தைக் கொண்ட முலையைச் சுவைத்து பால் நாற்றம்

c