இரண்டாம்
பாகம்
கொண்டெழுங்
கவன வாம்பரி யளித்துக்
குருநபிக் கறைதியென் றோதித்
திண்டிற லவரை
விடுத்துப்பின் னிரையைத்
தொடர்ந்தனர் சிலைவய வீரர்.
17
(இ-ள்) அவ்வாறு அவர்கள் ஆகாயத்தின் கண்
தூசியானது பரவும் வண்ணம் அப்பசுக் கூட்டங்களை
நடத்துகின்ற சமயத்தில், விஜயத்தைக் கொண்ட சல்மா
றலியல்லாகு அன்கு என்று சொல்லும் அந்த அரசவர்கள்
அதைப் பார்த்து மனமானது கோபிக்கப் பெற்று
வலிமையையுடைய றபாகென்பவரை வேகத்தோடுங் கூப்பிட்டுத்
தாங்களேறிக் கொண்டெழும் விசையையுடைய தாவிச்
செல்லுகின்ற குதிரையைக் கொடுத்து இச்சமாச்சாரத்தைக்
குருவாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்களுக்குச் சொல்லுவாயாக வென்று
சொல்லித் திண்ணிய வலிமையையுடைய அவரை அனுப்பி விட்டு
அப்பால் கோதண்டத்தையுடைய வெற்றியைக் கொண்ட
வீரராகிய அவர்கள் அந்தப் பசுக்கூட்டத்தைப்
பின்பற்றினார்கள்.
4929. குயினுறைந் தலறும்
வரைமிசை யேறிக்
குன்றுறழ் மாடங்க டோன்று
மெயிலுடை மதீன மாநகர் நோக்கி
யிடித்தெனக் கூக்குர லிட்டு
மயிர்புள கெழவெங் கணைமழை பொழியும்
வாங்குவிற் றடக்கைமேற் கொண்டு
செயிரற வளைத்து நாணினை யெறிந்தார்
திசைக்கரிச் செவிசெவி டெடுப்ப.
18
(இ-ள்) அவ்வாறு பின்பற்றிய அவர்கள்
மேகங்கள் தங்கி முழக்கா நிற்கும் ஒரு மலையின் மீது ஏறி
மலையைப் போன்ற வீடுகள் தோற்றுகின்ற கோட்டை
மதிலையுடைய திரு மதீனமா நகரத்தைப் பார்த்து இடி
இடித்தாற் போலும் பெருஞ்சத்தமிட்டு உரோமங்கள்
புளகெழும்படி வெவ்விய அம்பாகிய மழையைச் சிந்தும்
வளைத்த கோதண்டத்தைப் பெரிய கையின் மீது கொண்டு
குற்றமறும்படி வளைத்து எண்டிசைகளிலு முள்ள யானைகளின்
காதுகளானவை செவிடெடுக்கும் வண்ணம் நாணை வீசினார்கள்.
4930. நறைகம
ழலங்கல் அக்வகு தவத்தி
னுதித்தெழு நரபதி சல்மா
தொறுவினைக் கவர்ந்த கத்துபான் கூட்டத்
தொகைப்படைத் தலைவர்க டிகைப்பத்
|