இரண்டாம்
பாகம்
தரையினிற்
சோரி கொட்டிட வொருவன்
றடக்கழற் காலுடைந் துழலக்
கறுவொடும்
வெகுண்டு வடிக்கணை தெரிந்து
விட்டனர் கார்முகங் குழைய.
19
(இ-ள்) அவ்வாறு வீசி வாசனையானது பரிமளியா
நிற்கும் புஷ்ப மாலையைத் தரித்த அக்வகுவென்பவனது
தவத்தினால் இப்பூலோகத்தின் கண் அவதரித்து ஓங்கிய
அந்தச் சல்மாறலியல்லாகு அன்கு அவர்கள் பசுக்களைக்
கவர்ந்து செல்லுகின்ற அந்தக் கத்துபான் கூட்டமாகிய
தொகையைக் கொண்ட படைத்தலைவர்கள் பிரமிக்கவும்,
பூமியின் கண் இரத்தமானது சிந்தவும், ஒருவன் தனது பெரிய
வீரக்கழலைத் தரித்த காலானது தகர்ந்து உழலவுங்
கறுவோடுங் கோபித்துக் கூரிய அம்புகளை ஆராய்ந்தெடுத்து
வில்லானது வளையும்படி விடுத்தார்கள்.
4931. ஊறுபட் டுடைந்த
காளையைக் கண்டங்
கொண்டிறற் புரவலர் பின்னும்
வேறுபட் டெழுந்த மள்ளர்கள் வியப்ப
விறலின்மேம் பாட்டுரை கூறித்
தாறுபட் டெழுந்த மதமலை கூசத்
தாலங்கீழ் விழப்பணி பணிய
வீறுபட் டெழுந்த கொடுமரங் குழைய
விட்டனர் கணைமழை யென்ன.
20
(இ-ள்) அங்கே மிகுத்த வலிமையையடைய
அரசரான அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள்
அவ்வாறு காயப்பட்டுத் தகர்ந்த அந்த வீரனைப்
பார்த்துப் பின்னரும் விகற்பமாய் எழும்பி வந்த
வீரர்களான அந்தக் காபிர்கள் ஆச்சரியமுறவும்,
தாறுபட்டெழும்பிய யானைகள் அஞ்சவும், பூமியானது கீழே
விழவும், ஆதிசேடன் தாழவும் வெற்றியினது மேன்மையான
சபதவார்த்தைகளைச் சொல்லிப் பெருமையுற்றோங்கிய
கோதண்டமானது குழையும் வண்ணம் மழையைப் போலும்
அம்புகளை விடுத்தார்கள்.
4932. குடைநிழ லகலா மன்னவர்
புயத்துங்
கொய்யுளை மீதினுங் குணிலார்ந்
தடிபடும் பேரி யிடத்தும்விண் டோய்ந்த
வடல்செறி கதலிகை யிடத்தும்
பிடியுடை யுபய சாமரை யிடத்துந்
தோன்றிய பீலிகை யிடத்துங்
கடிகமழ் மாலை வயவர்கண் மார்பும்
பட்டன கடுங்கணை நிறைந்தே.
21
|