இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவ்வாறுவிட, கொடிய அந்த அம்புகள்
மலிந்து கவிகையினது நிழலை விட்டும் நீங்காத அரசர்களது
தோள்களிலும், கொய்து கட்டிய புறமயிரையுடைய
குதிரைகளின் மீதும், குறுந்தடியாற் பொருந்தி அடிபடா
நிற்கும் பேரிகையிடத்தும் ஆகாயத்தின் கண் தோய்ந்த
வெற்றி மிகுந்த கொடிகளிடத்தும் பிடியையுடைய
இரட்டையாகிய சாமரைகளிடத்தும், விளக்கமுற்ற
பீலிகையிடத்தும், வாசனையானது பரிமளியா நிற்கும்
புஷ்பமாலையத் தரித்த வீரர்களது மார்பிலும் பட்டன.
4933. கோடைபோற் சுழன்று
வரும்பரி கடாவிக்
கொண்டெழுந் தலைவரி லொருவ
னேடலர் மாலைப் புயன்கர வாளா
லெறியுமுன் னோர்மரத் தொதுங்கிப்
பாடலத் தமர்ந்த கொடியவ னாவி
பறிபடப் பகழியால் வீழ்த்தித்
தேடரும் வாகை சூடியே விரைவிற்
சென்றன ரொருதனிச் சிங்கம்.
22
(இ-ள்) அவ்வாறுபட, கோடைக் காற்றுப்
போலுஞ் சுழற்சியுற்று வரா நிற்குங் குதிரைகளைச்
செலுத்திக் கொண்டெழும்பிய தலைவர்களான அந்தக்
காபிர்களில் ஒருவனான இதழ்கள் விரிந்த மாலையைத்
தரித்த தோளையுடையவன் தனது கைவாளால் வீசுமுன்னர்
மிகவும் ஒப்பற்ற சிங்கமாகிய அந்தச் சல்மா
றலியல்லாகு அன்கு அவர்கள் ஒரு மரத்தின் மறைவிற்
பதுங்கிக் குதிரையின் மீதிருந்த கொடி யோனான
அக்காபிரின் பிராணனானது பறிபட்டுச் சொல்லும் வண்ணந்
தங்களது அம்பினால் அவனைப் பூமியின் கண் வீழச் செய்து
தேடுதற் கருமையான வெற்றி மாலையைத் தரித்து வேகமாய்ப்
போனார்கள்.
4934. பாலொரு குடங்கா
சத்திரி யீன்ற
பறழ்களுங் குட்டியுஞ் செறிந்த
காலிக ளனைத்துஞ் சிதைவிலா தடர்ந்த
கடும்பரற் பொலிதரு சாரன்
மேலொருத் தொண்டி னெறியினின் மள்ளர்
விரைவொடுங் கொண்டெழுந் தேகச்
சாலவு நிவந்த பெருவரை யெருத்திற்
சார்ந்தனர் திறல்வய வீரர்.
23
(இ-ள்) பாலினையுடைய ஒப்பற்ற பசுக்களும்
எருமைகளும் ஒட்டகங்களும், அவைகளீன்ற கன்றுகளுங்
குட்டிகளுமாகிய
|