இரண்டாம்
பாகம்
நெருங்கிய காலிக
ளெல்லாவற்றையுஞ் சிதைவின்றி யடர்ந்த கொடிய
பரற்கற்கள் மலிந்த மலைப்பக்கத்தின் மீது ஒரு
தொண்டினது பாதையில் வீரர்களாகிய அந்தக் காபிர்கள்
வேகத்தோடுங் கொண்டெழும்பிச் செல்ல, வலிமையையும்
வெற்றியையுமுடைய வீரரான அந்தச் சல்மா றலியல்லாகு
அன்கு அவர்கள் அவ்வாறு போய் மிகவுமோங்கிய பெரிய ஒரு
மலையினது உச்சியிற் சேர்ந்தார்கள்.,
4935. சிலம்பினிற் கிடந்த
பருக்கையீ றாகச்
செறிந்திடுஞ் சிராவண மெவையு
முலம்பொரு தோளாற் றள்ளினர் கையா
லெறிந்தன ரவையுருண் டோடி
வலஞ்சுழி நெற்றி வாலுளைக் கலின
வாம்பரிக் கால்களைத் தகர்த்துக்
கலம்படு தடந்தோட் டெவ்வரை வீழ்த்திப்
பிதிர்த்தது தொனியொடு மாதோ.
24
(இ-ள்) அவ்வாறு சேர்ந்து அம்மலையிற்
கிடந்த உருண்டைக் கற்களிறுதியாக நெருங்கிய
கற்களெல்லாவற்றையும் அந்தச் சல்மாறலியல்லாகு அன்கு
அவர்கள் தங்களது திரளைக்கல்லை நிகர்த்த புயங்களால்
தள்ளினார்கள். கையினால் வீசினார்கள். அந்தக்
கற்கள் முழக்கத்தோடு முருண்டு ஓடிப் போய் வலஞ்சுற்றுஞ்
சுழியைக் கொண்ட நெற்றியையும் மிகுதியான புறமயிரையும்
கடிவாளத்தையுமுடைய தாவிச் செல்லுகின்ற குதிரைகளின்
பாதங்களை யுடைத்து வலிமையைக் கொண்ட பெரிய
தோள்களையுடைய சத்துராதிகளான அந்தக் காபிர்களைப்
பூமியின் மீது விழச் செய்து பிதிர்ந்தன.
4936. தடஞ்செறிந்
திலங்கு மாறுபா யருவி
யாயிரந் திளைத்திடுஞ் சார
லிடங்களுங் களிற்று மும்மத நாறு
மிருங்கழை வனங்களுங் கடந்து
நடஞ்செறிந் திடுங்காற் காகுரப் புரவி
மன்னர்க ணடந்திடத் தொடர்ந்து
கடும்புரி முறுக்கிக் கழுத்தினிற் பிணித்த
கார்முக மெடுத்தனர் வியப்ப.
25
(இ-ள்) அன்றியும், வாவிகள் நெருங்கிப்
பிரகாசியா நிற்கும் ஆறுகள் பாய்கின்ற ஆயிரமருவிகள்
நிறைந்த மலைப் பக்கத்தினது இடங்களையும், யானைகளின்
கன்னமதம், கைமதம், கோசமததென்னும் மும்மதங்களும் நாறா
நிற்கும் பெரிய மூங்கிற் காடுகளையும் தாண்டி நடையானது
செறியும் பாதங்களுக்காகிய
|