முதற்பாகம்
பதவுரை
நம்மை
ஆள் உடையான் - நம்மை ஆளுகின்ற யாவற்றையும் சொந்தமா
யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின், வேத நபி -
புறக்கானுல் அலீமென்னும் வேதத்தினது நபியாகிய நாயகம்
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்லமவர்களினது, திருவசனம் - தெய்வீகந் தங்கிய
வசனத்தை, தீனோர் சம்மதித்திட - தீனுல் இஸ்லா
மென்னும் மார்க்கத்தை யுடையவர்கள் சம்மதிக்கும்
வண்ணம், பார் எல்லாம் - பூமி முழுவதும், தழைக்கவே
விளக்கம் செய்தோர் - ஓங்கும்படி விளங்கச்
செய்தவரான, இம்மையும் மறுமையும் - இம்மையிலும்
மறுமையிலும், பேறு இலங்கிய சதக்கத் துல்லா - கதியான
திலங்கப் பெற்ற செய்கு சதக்கத் துல்லாவொலி
அவர்களின், செம்மலர் அடி இரண்டும் - செவந்த கமலமலரை
இரு சரணங்களையும், சிந்தையில் இருத்தினேன் - யான்
மனதின்கண் இருக்கச் செய்தேன்.
பொழிப்புரை
நம்மை
ஆளுகின்ற யாவற்றையும் சொந்தமாயடையவனான அல்லாகு
சுபகானகு வத்தஆலாவின் புறக்கானுல் அலீமென்னும்
வேதத்தினது நபியாகிய நாயகம் முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களினது தெய்வீகந் தங்கிய
வசனத்தைத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை
யுடையவர்கள் சம்மதிக்கும் வண்ணம் பூமி முழுவதும்
ஓங்கும்படி விளங்கச் செய்தவரான இம்மையிலும்
மறுமையிலும் கதியான திலங்கப் பெற்ற செய்கு
சதக்கத்துல்லா வொலி அவர்களின் செவந்த கமலமலரை
யொத்த இரு சரணங்களையும், யான் மனதின்கண் இருக்கச்
செய்தேன்.
வேறு
18. திக்க னைத்தினும்
பாரினுந் தீவினுஞ் செங்கோற்
புக்க நன்னெறித் திகிரிமன் னவர்கண்முன் பொருந்தத்
தக்க கூலியுஞ் செய்துண வறிகிலான் சரிபோன்
மிக்க செந்தமிழ்ப் புலவர்மு னியான்விளம் புவதே.
18
பதவுரை
மிக்க செந்தமிழ் புலவர் முன் - மிகுந்த
அழகையுடைய தமிழினது புலவர்களின் முன்னர், யான்
விளம்புவது - நான் (இந்நூலைக்) கூறுவது, திக்கு அனைத்தினும் -
எல்லாத் திசைகளிலும், பாரினும் - பூமியிலும்,
தீவினும் - தீவுகளிலும், செங்கோல் புக்க - தனது
நீதியானது செல்லும் வண்ணம், நல்நெறி -
|