முதற்பாகம்
பிரகாசிக்கும் உடல்
பதைப்புற்று வாய்வெளுத்து எரிகின்ற நெய்யின்கண் வைத்த மாந்தளிரைப் போல இருந்த
அரிவையாகிய அவ்வலிமா அவர்களினிடம் அந்தப் பாதையிற் போகா நின்ற மற்றும் ஜனங்கள் வந்து
சேர்ந்தார்கள்.
455.
ஏது வந்தவை
யென்றடைந் தவர்சில ரியம்பக்
கோதை யீரென
துறுகுலக் களிறொரு குழந்தை
தீது லாப்பெயர்
முகம்மது வெனுஞ்சிறு வனையிப்
பாதை யினிழந்
தேன்கொடி யேயெனனப் பகர்ந்தாள்.
65
(இ-ள்)
அவ்வாறு அங்குவந்து சேர்ந்த வழிப்போக்கர்களிற் சிலர் ஹலிமா அவர்களை நோக்கி இங்குவந்து
சம்பவித்தது யாதென்று கேட்க அதற்கு ஹலிமா அவர்கள் மாலைசூடிய கூந்தலையுடைய பெண்களே! எனது
பொருந்திய குலக்களிறான ஒப்பற்ற மதலையாகிய முகம்மதென்று சொல்லும் குற்றமில்லாத
திருநாமத்தையுடைய சிறுவரைக் கொடுமைதங்கிய யான் இவ்வழியின்கண் இழக்கப் பெற்றேனென்று
சொன்னார்கள்.
456.
கேட்ட பேர்கடம்
மனம்பயந் தறக்கெடி கலங்கிக்
காட்டி னிப்பெரும்
புதுமையைக் கருத்தினிற் றெளிந்து
மூட்டும் வல்வினை
பிரித்திட முடித்தவன் முறையாய்க்
கூட்டி விப்பதும்
வலியதோ கூட்டுவன் கோதாய்.
66
(இ-ள்)
ஹலிமா அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளைக் காதுகளினாற் கேள்வியுற்ற
அவ்வழிப்போக்கர்கள் தங்களது மனமானது அச்சமுற்று மிகக் கெடிகலங்கிக் காட்டின்கண் வைத்து
நடந்த இப்பெரிய அதிசயத்தை சிந்தையினால் யோசித்துத் தெளிவடைந்து அலிமா அவர்களை
நோக்கிப் பெண்ணே! மூட்டுகின்ற வல்வினையினால் உன்னைவிட்டும் உனது மகன் முகம்மதைப்
பிரித்திடும்படி முடித்தவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவானவன் இனி அம்மகனை உன்னோடு ஒழுங்காய்ச்
சேர்த்து வைப்பதும் பெரிய காரியமா? இல்லை ஆனதினால் சேர்த்துவைப்பான்.
457.
எனவே டுத்தநன்
மொழிகளா லிவர்கருத் தியைய
நனைத ருங்குழன்
மடந்தையர் தேற்றியு நடுக்கந்
தினையி னவ்வள
வாயினுந் தேறில டியங்கு
மனைய காலையில்
விருத்தனென் றொருத்தன்வந் தடைந்தான்.
67
(இ-ள்)
என்று தொடங்கிய நல்ல வார்த்தைகளினால் தேனானது மாறாது குடியிருக்கப்பெற்ற கூந்தலையுடைய அந்த
வழிப்போக்கர்களிலுள்ள பெண்கள் இந்த ஹலிமா அவர்களின
|