முதற்பாகம்
சிந்தையானது இசையும்படி
அவர்களினது நடுக்கத்தைத் தேற்றியும், அவர்கள் ஒரு தினையினது பிரமாணமாயினுந் தேற்றம்
பெற்றிலர்கள். அப்படித் தேற்றம் பெறாது சோர்வையடைந்து கொண்டிருக்கின்ற அந்தச்
சமயத்தில் கிழவனென்று சொல்லும்படி ஒரு மனிதன் அவ்விடத்தில் வந்து சேர்ந்தான்.
458.
கையி லூன்றிய
தடியுமோர் கயிற்கவி கையுமாய்
மெய்யே லாநரம்
பெழுந்துல ரியவிரி திரையாய்த்
துய்ய நூல்விரித்
தனநுரை துலங்கிடக் கூனி
நையு மென்றலை
நடுக்கொடு மெலமெல நடந்தே.
68
(இ-ள்)
ஒருகையில் ஊன்றிய கோலும் மற்றொரு கையில் குடையுமாய் மேனி முழுவதும் நரம்பானது எழும்பி
வற்றியவிரிந்த உடற்றிரையாய் உரோமங்களில் பரிசுத்தமான வெள்ளிய நூலை விரிந்தாற்போல
நரைகள் பிரகாசிக்கும்படி கூனிக்கொண்டு வதங்கா நின்ற மெல்லிய தலை நடுக்கத்தோடும்
பையப்பைய நடந்து.
459.
வந்து தோன்றிய
முதியவ னரிவைநின் மனத்தி
னொந்தி ருந்தவா
றேதெனப் பூங்கொடி நுவன்றாள்
கந்த டர்க்கயக்
களிறெனு முகம்மதைக் கானிற்
சிந்தி னேனுயிர்
சிந்தவு நினைத்தன னெனவே.
69
(இ-ள்)
அவ்விடத்தில் வந்து தோற்றமாகிய அக்கிழவனானவன் ஹலிமா அவர்களைப் பார்த்து பெண்ணே!
உன்னுடைய மனத்தின்கண் வருத்தமடைந்திருக்கும் வாறேதென்று கேட்கப், பூவா லியன்ற கொடியாகிய
ஹலிமா அவர்கள் இந்தக் காட்டினிடத்துக் கட்டுத்தறியை அடரா நிற்கும் இளமை பொருந்திய யானை
என்று சொல்லும்படியான எனது புதல்வர் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச்
சிதறினேன். அதனால் எனது ஜீவனையும் சிதறும்படி கருதினேனென்று சொன்னார்கள்.
460.
திருந்து
மென்மலர்க் கொடியிடை கேட்டிநின் சிந்தை
வருந்த னின்றிரு
மகன்முகம் மதுவையிவ் வழியிற்
பொருந்தக்
கூட்டுமறுந் தெய்வமொன் றுளதியாம் புகுந்தங்
கிருந்து கேட்குவம்
வம்மென நன்மொழி யிசைத்தான்.
70
(இ-ள்)
அதுகேட்ட அக்கிழவனானவன் திருந்தா நிற்கும் மெல்லிய பூவாலான கொடிபோலு மிடையினையுடைய
ஹலிமாவே! நீ கேட்பாயாக; உனது மனமானது வருந்தல் வேண்டாம். உன்னுடைய தெய்வீகமுற்ற மகனாகிய
முகம்மதுவை இந்தப் பாதையின்கண் சேரும்படி கூட்டுதற்குப் பொருந்திய
|