பக்கம் எண் :

சீறாப்புராணம்

206


முதற்பாகம்
 

வெள்ளிய சந்திரனொன்று சமுத்திரத்தின் கண்ணிருந்து வெளிப்பட்டு இப்பூமியின் மீது எழா நிற்குந் தோற்றத்தையொத்திருந்தது.

 

498. வருந்திமெய் நடுக்கொடு மரைகண் மூழ்குவ

    தருந்தவப் பேறெனு மகும தின்றிருக்

    கருந்தடங் கண்முகந் தாள்கைக் கொப்பெனப்

    பொருந்துறோ மெனவனம் புகுதல் போன்றதே.

17

     (இ-ள்) அன்றியும் அத்தடாகத்தின் கண்ணுள்ள தாமரைகள் துன்புற்று சரீர நடுக்கத்துடன் அங்கு முழுகுவனவை அரிதான தவத்தினது செல்வமென்று சொல்லா நிற்கும் அஹ்மதென்னும் திருநாமத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகத்துவம் பொருந்திய கரிய நிறத்தையுடைய விசாலமான கண்களுக்கும் முகத்திற்கும் பாதங்களுக்கும் கைகளுக்கும் நாம் நிகரென்று சொல்லும்படிப் பொருந்த மாட்டோமென்று ஜலத்தின் கண் நுழைந்து கொள்வனவையை யொத்திருந்தன.

 

499. அகுமது வாவிநீ ராடல் காண்டலுஞ்

    சகமகிழ் தடக்கரைத் தருக்க டேமலர்

    வகைவகை சொரிந்தன வெற்றி வானவர்

    புகழொடும் பொன்மலர் பொழிவ போன்றவே.

18

     (இ-ள்) அன்றியும், இவ்வுலகாமனது மகிழா நிற்கும் அஹ்மதென்னும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அத்தடாகத்தினது ஜலத்தின் கண் ஸ்நானஞ் செய்வதை அதின் விசாலம் பொருந்திய கரைகளில் நிற்கும் விருட்சங்களானவை பார்த்தமாத்திரத்தில் தங்களது விதவிதமான வாசனை தங்கிய புஷ்பங்களைச் சொரிந்தவைகள் விஜயத்தையுடைய தேவர்கள் கீர்த்தியோடும் சொர்ணத்தாலான புஷ்பங்களைச் சொரிந்தவைகளை யொத்திருந்தன.

 

500. மதுமலர்த் தேனையுண் டிருந்த வண்டினம்

    புதுமணச் சுரும்பொடு மிசைத்த பொங்கிசை

    சதுமறை முகம்மது தழைத்து வாழ்கவென்

    றதிவிதப் புகழெடுத் தறைத லன்னதே.

19

     (இ-ள்) அன்றியும், அவ்விடத்திலுள்ள மகரந்தங்களையுடைய புஷ்பங்களினது மதுவையருந்தி யங்கிருந்த வண்டுக் கூட்டங்களானவை தங்களது நூதனமாகிய விவாகத்தையுடைய ஆண் வண்டுகளோடும் பாடிய மிகுத்த பாடலானது நான்கு வேதங்களையுமுடைய நபிகள் பெருமான் முகம்மது சல்லால்லாகு