முதற்பாகம்
(இ-ள்)
அங்ஙனம் சமுசயமடைந்த அவர்கள் இவருக்குப் பிடரியின்கண் இலாஞ்சனை யொன்றுள்ளது. அஃது சரீர
முழுவதிலும் வரிசை விட்டுப் பிரகாசிக்கின்றது. அன்றியும் பாதங்கள் நிலத்தின் மீது பொருந்தவில்லை
அழகிய உடலினது சாயையும் உணரும்படி பார்ப்பதற்குப் பூமியிற் சாரவில்லை. இக் காரணங்களினால்
இவர் நபிதானென்று தெளிவடைந்து விதித்தார்கள்.
508.
பூரண மதியமே போலப்
பின்னைநாட்
டாரணி தனினபி
வருவர் சான்றென
வாரணத் துணர்ந்தறிந்
தறிஞர் கூறிய
காரணக் குறிப்பவர்
காணுங் காணென்றார்.
27
(இ-ள்)
அன்றியும், அவர்கள் இவ்வுலகத்தின்கண் பிற்காலத்தில் பூரணச் சந்திரனைப் போல நபியென்று
ஒருவர் பிரசன்னமாவர் அவருக்கு இக்குறிக ளெல்லாம் சாட்சியென்று முன் வேதங்களில் கற்றுத் தெளிர்ந்
துணர்ந்து பண்டிதர்கள் சொல்லிய காரணத்தையுடைய அடையாளங்கள் முழுவதையும் இங்கு இருக்கப்பட்ட
இந்த மனிதனிடத்தில் பாருங்களென்று சொன்னார்கள்.
509.
கண்டவர் கேட்டவர்க்
குரைப்பக் காதினிற்
கொண்டவர் கருத்தினிற்
குறித்து சாவுவ
ரண்டர்நா யகநபி யுண்டென்
றூதிநூல்
விண்டது தவறுறா மெய்யென்
றோதுவார்.
28
(இ-ள்)
அவ்வாறு பார்த்த எகூதிகள் வினாவிய எகூதிகளுக்குக் கூற, அவ்வார்த்தைகளைச் செவிகளில் பெற்றவர்கள்
சிந்தையின்கண் குறிப்பிட்டு யோசிப்பார்கள். தேவர்களுக் கெல்லாம் நாயகமான நபியொருவர்
உண்டென்று வேதங்கள் சொல்லியவைகள் குற்றப்படாது சத்தியந்தா னென்று சொல்லுவார்கள்.
510.
தேந்தரு தடத்தரு
விடுத்துச் செம்மலு
மாந்தர்கண்
களிப்புற மனையிற் புக்கபி
னேந்தெழி லாமினா
வினமு மாயமுந்
தாந்தம துளங்களி லெண்ணஞ்
சாற்றுவார்.
29
(இ-ள்)
அப்பொழுது நபிகணாயகம் முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் மற்றும் சிறுவர்களும் வாசனையைத்
தராநின்ற அந்தத் தடாகத்தினது கரையின் கண்ணிருக்கும் விருக்க நிழலை விட்டும் நீங்கிப்
பார்க்கும் மனிதர்களின் கண்களானவை மகிழ்ச்சியடையும்படி தங்களது வீட்டின்கண் போய்புகுந்த
|