பக்கம் எண் :

சீறாப்புராணம்

22


முதற்பாகம்
 

கோபமும் ஆலாங்கட்டியும் உதிர்ந்தவை, பிரகாசத்தைச் செய்கின்ற முத்தமும் மாணிக்கத்தினது கூட்டமும் ஒன்றாய்க் கலப்புற்று அந்த மலை முழுவதிலும் ஒருங்குடன் சிந்தும் தன்மையை நிகர்த்திருந்தன.

 

24. பம்மி யெங்கணும் பொழிதரு சாரல்வாய்ப் பட்டுக்

   கம்மி னத்தக டுறக்கொடு கியகுளிர் கலக்க

   மும்ம தக்கரி களுமரி களுமுர ணறவே

   சம்ம தித்தொரு புடைகிடப் பனவெனச் சாரும்.

4

 

      (இ-ள்) அன்றியும், எவ்விடத்தும் பம்முதலுற்றுப் பெய்கின்ற அந்தச் சாரலினது இடத்திலகப் பட்டுத் தலை யானது தனது இனத்தின் வயற்றில் பொருந்தும் வண்ணம் கொடுகிய கூதலினது சஞ்சலத்தால், கன்னமதம், கைமதம், கோசமத மென்னும் மூன்று மதங்களையு முடைய யானைகளும் சிங்கங்களும் தங்களில் விரோதமறும்படி இணங்கி ஓரிடத்திற் கிடப்பவைகளைப் போலச் சாரா நிற்கும்.

 

25. தந்தி மான்மரை யணில்கொடு வரிதக ருடும்பு

   மந்தி சிங்களங் கவரிமா வழுங்குதே வாங்கு

   முந்து மான்மத மெண்குசெந் நாய்பணி முண்மா

   நந்தி மிஞ்சிய விலங்கினங் கொடுகிமெய் நடுங்கும்.

5

      (இ-ள்) அன்றியும், யானை, மான், மரை, அணில், புலி, ஆடு, உடும்பு, மந்தி, சிங்களம், கவரிமா, அழுங்கு, தேவாங்கு முந்துகின்ற குதிரை, மதத்தைக் கொண்ட கரடி, செந்நாய், எருமை, முள்ளம் பன்றி, எரு தாகிய அதிகரித்த மிருகக் கூட்டங்கள் அம்மழையினால் கொடுகுத லுற்றுத் தங்களின் சரீரமானது நடுக்க மடையா நிற்கும்.

 

26. வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றி

   கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி

   நாங்கு காரகில் குங்கும மிலவு நாரத்தை

   தாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும்.

6

     (இ-ள்) அன்றியும், அந்த மழையானது வேங்கை, சந்தனம் சண்பகம், நெல்லி, மூங்கில், தான்றி, கோங்கு, அசோகு, தேக்கு, ஆசினி, பாடலம், ஈந்து, நாங்குங் கரிய அகில், குங்குமம், இலவம், நாரத்தை யாகிய இவைகளைத் தாங்காநிற்கும் வேர்களானவை அற்றுப் போகும் வண்ணம் கற்களுடன் அந்த மலையினிடத்துச் சாயும்படி செய்யா நிற்கும்.

 

27. விலங்கி னங்கடங் குலத்தொடுங் குழுவொடும் வெருட்டிக்

   கலங்கு மஞ்சிறைப் பறவைக ளனைத்தையுங் கலைத்தே