பக்கம் எண் :

சீறாப்புராணம்

24


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், வெண்ணிறத்தை யுடைய அந்த அருவியின் கூட்டங்கள் மலையென்று கூறும் மன்னவனது தோள்களைக் கட்டியணைத்து அவனைக் களிப்படையச் செய்து அவனிடத்திற் சிறக்கப் பெற்ற நிலைமையை யுடைய செழிய பொன்னையும், சருப்பத்தினது சிவந்த மணிகளையும், முத்துக் கூட்டங்களையும் கைவசப்படுத்தித் தொலையாத அங்குள்ள பொருள்க ளெல்லாவற்றையும் அள்ளிச் சுருட்டிக் கொண்டு தானத்தை விட்டு நீங்கா நிற்கும் விலைமகளை நிகர்த்தும் பற்பல முகமாகச் சாய்ந்தன.

 

கலிநிலைத்துறை

 

30. தாது குத்துவண் டார்த்தெழத் தருத்தலை தடவி

   வீதி வாய்நுரை தரவரு பாகெழ வீசிக்

   காது மாகளி றெனநதி கழைக்கடங் காது

   மோதிக் காலினா லெற்றியே யணையிட முறிக்கும்.

10

     (இ-ள்) அவ்விதஞ் சாயும் நதிகளானவை மகரந்தங்களைச் சிந்தி வண்டுகள் ஒலித்துக் கொண்டு எழும் வண்ணம் சோலைகளைக் கெடுத்து வழியின்கண் நுரை தரும்படி கரைகளினால் எழும்ப எறிந்து கொலைத் தொழிலை யுடைய பெரிய யானையைப் போலும் கழைக் கமையாது அணையிடங்களைக் காலினால் ஏற்றி இடித்து முறியப் பண்ணாநிற்கும்

 

31. பரந்த வெண்ணுரைத் துகிலுடுத் தறற்குழற் பரப்பி

   விரைந்து பாய்கயல் விழியெனத் திரைக்கரம் வீசிச்

   சுரந்த புற்புதத் தனத்துடன் சுழியுந்தி தோற்றப்

   பொருந்து மானதி விளங்கிழை மகளிரைப் போலும்.

11

     (இ-ள்) அன்றியும், பரவிய வெண்ணிறத்தையுடைய நுரையாகிய வஸ்திரத்தை யுடுத்துக் கரு மணல்களாகிய கூந்தலை விரித்து விரை வுற்றுச் சாடுங் கெண்டை மீன்கள் கண்களென்று சொல்ல அலைகளாகிய கைகளை வீசி நிறைந்த நீர்க்குமிழி யாகிய முலைகளுடன் சுழியாகிய தொப்புளானது விளங்கும் வண்ணம் பொருந்தாநிற்கும் பெருமை தங்கிய அந்த நதியானது பிரகாசிக்கின்ற ஆபரணங்களை யுடைய மாதர்களை நிகர்த்தது.

 

32. கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கோ

   டுடைந்த முத்தம்வெண் டந்தமுச் சுடரொளி யொதுங்கக்

   கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேற

   நடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே.

12

      (இ-ள்) அன்றியும், செழிய கழைகளுக்கமையாத அந்த ஆறானது அங்கு கிடக்கப் பெற்ற சந்தனம், கரிய அகில்