பக்கம் எண் :

சீறாப்புராணம்

25


முதற்பாகம்
 

பிரகாசத்தையுடைய இரத்தினம், யானையினது கொம்புகள் தகர்ந்ததிலிருந்து உண்டாகிய முத்துக்கள், வெள்ளிய தந்தம், அக்கினி, ஆதித்தன், சந்திரனென்னும் மூன்றினது பிரகாசங்களும் ஒதுங்கும் வண்ணந் தாண்டிய ஒளியை யுடைய மாணிக்கம் ஆகிய இவைகளைப் பையோடு கொண்டு சமுத்திரத்தில் ஏறும்படி நடந்து சென்ற வர்த்தகனை நிகர்த்தது.

 

                   எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

     33. இத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தே

             யெரிதழற் பாலையிற் புகுந்து

        மைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வா

             யெயிற்றியர் வயிறலைத் தேங்கக்

        கைத்தலத் தேந்து குழந்தையுஞ் சிறாரும்

             வேடர்தங் கணத்தொடும் வெருட்டி

        முத்தணி சிறப்ப விருகரை கொழித்து

             முல்லையிற் புகுந்தது சலிலம்.

13

      (இ-ள்) ஜலத்தைக் கொண்ட இந்தத் தன்மையை யுடைய அந்த ஆறாவது குறிஞ்சி நிலத்தைத் தாண்டி எரியாநிற்கும் அக்கினியைக் கொண்ட பாலை நிலத்தில் நுழைந்து மேகத்தை யொத்த பெரிய கூந்தலையும் கரிய கண்களையும் சிவந்த வாயையு முடைய அந்தப் பாலை நிலத்தியர்கள் தங்களின் வயிற்றில் அறைந்து கொண்டு அழும் வண்ணம் கையினிடத் தேந்தாநிற்கும் மதலைகளையும் பாலியர்களையும் மறவர்களின் கூட்டத்தோடும் துரத்தி முத்துக்களை அழகாய்ச் சிறக்கும்படி இரண்டு பக்கத்தினது கரைகளிலும் ஒதுக்கி முல்லை நிலத்தில் நுழைந்தது.

 

     34. பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப்

             பட்டியுங் குட்டியுஞ் சிதறிச்

        சூறையிட் டுதறி நெய்முடை கமழுஞ்

             சுரிகுழற் றொறுவிய ருடுத்த

        கூறையுங் குழலுங் குடுக்கையுந் தடுக்குங்

             கொண்டெடுத் தவர்நிரை சாய்த்து

        வேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்து

             மருதத்திற் பரந்தன வெள்ளம்.

14

      (இ-ள்) அவ்வாறு நுழைந்த ஜலத்தைக் கொண்ட அந்த ஆறானது நறிய பால், தயிர், நெய்யாகிய இவைகளைப் பாத்திரத்தோடு கலக்கி ஆட்டு மந்தைகளையும் அவ்வாட்டின் குட்டிகளையும் சிதறச் செய்து கொள்ளையிட்டு இடங்கொடாமல் தள்ளி நெய்யினது முடையானது பரிமளியாநிற்குங் கூந்தலையுடைய அந்த முல்லை நிலத்தினது இடைச்சியர்கள்