பக்கம் எண் :

சீறாப்புராணம்

260


முதற்பாகம்
 

657. கொடுவ ரிப்பதத் துகிர்முனை யரிந்தன கோதில்வெண் ணுறுவாசத்

    தடிசி லுமறு சுவைப்பொரிக் கறிகளு மமுதொடு செழுந்தேனும்

    வடிந றாவுடைந் தொழுகுமுக் கனியுடன் மதுரமென் மொழிகூறி

    யிடுவி ருந்தளித் தாரிரு வருக்குமோ ரிளங்கொடி மடமானே.

61

     (இ-ள்) அப்போது ஒப்பற்ற முற்றாத கொடிபோலும் இளம் பருவத்தை யுடைய மானாகிய கதீஜா அவர்கள் அபீத்தாலி பவர்களுக்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கும் மிருதுவாகிய வார்த்தைகளைப் பேசிக் கொடியவரிகள் படர்ந்த புலியின் பாதத்தினது நகநுனியை அறுத்தாற்போன்ற குற்றமற்ற வாசனைபொருந்திய வெள்ளியசோறும் அறுசுவைகளையுடைய பொரிக்கறிகளும் அமிழ்தத்துடன் செழிய தேனும் வடிகின்ற மதுவானது உடைந்து ஒழுகாநிற்கும். மா - பலா - வாழையென்னு மூன்றுகனி வருக்கங்களோடும் விருந்து கொடுத்தார்கள்.

 

658. அனம ருந்திய வரசர்க டமைமணி யாசனத் தினிதேற்றி

    நனைத ருந்துவர்க் காயிலை பாளித நறும்புகை மலர்சாந்தம்

    புனையு மென்றுகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பலவீய்ந்து

    சினவு வேல்விழி பொருள்கொடு வருகென வுரைத்தனர் திருவாயால்.

62

     (இ-ள்) அன்றியும், கோபிக்கின்ற வேற்படைபோலும் கண்களையுடைய கதீஜா அவர்கள் அன்னமருந்திய வரசர்களான அவ்விருவர்களையும் இரத்தினவர்க்கங்கள் பதித்த ஆசனத்தின் மீது இனிமையுடன் ஏறி இருக்கும்படி செய்து ஈரத்தையுடைய துவர்க்காய் வெற்றிலை நறிய புகையினையுடைய பாளிதம் புஷ்பம், சந்தனம், சரீரத்தின்கண் தரிக்காநிற்கும் மெல்லிய வஸ்திரம் சட்டை தலைப்பாகை இன்னும் இவைபோன்ற பலசாமான்களு மெடுத்துக் கொடுத்து ஏவலாட்களை யழைத்துத் திரவிய மெடுத்துக் கொண்டு வாருங்களென்று தங்களது அழகிய வாயினால் கட்டளை செய்தார்கள்.

 

659. ஆட கங்கொணர் கென்றலும் வான்றொடு மறையினிற் சிலரோடி

    மூடு பெட்டகந் திறந்தனர் கொணர்ந்தனர் குவித்தனர் முறையாக

    நீடி லக்கநூ றாயிரத் தொன்பதி னாயிர நிறைதேர்ந்த

    மாடை தானெடுத் தீய்ந்திடங் கொண்டனர் முகம்மது நயினாரே.

63

     (இ-ள்) அவ்வாறு திரவியம் கொண்டு வாருங்களென்று கதீஜா அவர்கள் கட்டளையிட்ட மாத்திரமே, சில ஏவலாட்கள் திரவிய மிருக்கப்பட்ட ஆகாயத்தைத் தீண்டும்படியான அரங்கி