பக்கம் எண் :

சீறாப்புராணம்

261


முதற்பாகம்
 

லோடிப்போய் மூடிய பெட்டகத்தைத் திறந்து அதிலிருந்த திரவியங்களை எடுத்துக் கொண்டுவந்து கதீஜா அவர்களின் முன்னர் ஒழுங்காகக் குவித்தார்கள். உடனே அவர்கள் நீண்டகணக்கில் இலட்சத்தியொன்பதினாயிரம் தங்கக்காசினது நிறையில் தெளிந்த திரவியங்களைத் தங்கள் கையினாலெடுத்து நயினாரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் பால்கொடுக்க அவர்கள் தங்கள் கைகளினால் வாங்கினார்கள்.

 

660. கொடுத்த தங்கம லாற்பெருஞ் சாமெனக் குறித்திடுந் திசைக்கேற்க

    வெடுத்த நற்சரக் கொட்டையின் பொதியிரு நூறொடு திரளாக

    விடுத்த கப்பரி வாரத்தி லுரியவர் விறல்கெழு வயவீரந்

    தொடுத்த நெஞ்சின ரிருபது பெயரையுந் தொகுத்தனர் மடமானே.

64

     (இ-ள்) இளமானான கதீஜா அவர்கள் அவ்விதங்கொடுத்த திரவியமல்லாமல் பெரிய சாமென்று சொல்லும்படி மதிப்பிட்டிடும் திக்கிற்குப் பொருந்தும் வண்ணம் எடுக்கப்பட்ட நல்ல சரக்குகளையுடைய ஒட்டகப் பொதியில் இருநூறொடு ஒட்டகங்களையும் கூட்டமாக அனுப்பித் தங்களது வீட்டின் கண்ணுள்ள பரிவாரத்திற் சொந்தக்காரரான வலிமைநிறைந்த வெற்றியின் வீரத்தைப் புனைந்த மனசையுடையவர்களாகிய இருபது பெயரையுங் கூடச் சேர்த்தார்கள்.

 

661. வடிவு றுந்திரட் டாள்களு மிருபுறம் வகிர்தரு மயிர்வாலு

    நெடுகிக் கட்டுரத் திறுகிய கண்டமு நிமிர்ந்தமெய் யுறுகூனு

    நடையி லோர்பகற் கொருபதின் காவத நடந்திடுந் திடத்தாலுங்

    கடிய வொட்டையொன் றெழினபிக் களித்தனர் கரியமை விழிமானார்.

65

     (இ-ள்) அன்றியும், கரியநிறம் பொருந்திய அஞ்சனந் தீட்டப்பட்ட கண்களையுடைய மானாரான அக்கதீஜா அவர்கள் அழகுதங்கிய திரண்ட பாதங்களையும் இரண்டு பக்கங்களிலும் வகிர்ந்த உரோமங்களையுடைய வாலினையும் நீட்சிகொண்டு உறுதியாகிய வலிமையினால் இறுக்கமுற்ற கழுத்தினையும் உயர்ந்த சரீரத்தின் கண்ணமைந்த கூனையும் நடையினால் ஒரு பகற் பொழுதில் பதின்காத நடந்திடுந் திடத்தினையுடைய கடிதான ஒட்டகமொன்றைச் சிறப்புப் பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குக் கொடுத்தார்கள்.

 

662. மல்ல லம்பிய புயமுகம் மதுநபி மனத்தினின் மகிழ்கூரச்

    செல்ல லைந்திடப் பொழிதரு கரமிசைச் செழுங்கதிர் வடிவேலு

    மெல்ல வன்கதிர் மறைதரு குற்றுடை வாளொடு மினிதீய்ந்தார்

    வில்லின் மேற்பிறை தோற்றிய தெனநுதல் விளங்கிய மடமானே.

66