முதற்பாகம்
(இ-ள்) அன்றியும்,
வில்லின்மேல் சந்திரனான திருந்து பிரகாசித்ததைப் போலும் நெற்றியானது விளங்கப் பெற்ற
இளமானான கதீஜா அவர்கள் வலிமை ததும்பிய தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள்
மனசின்கண் சந்தோஷமிருக்கும் வண்ணம் மேகமானது வருந்திடும்படி பொழியாநின்ற அவர்களது கையின்மீது
இனிமையுடன் சூரியனது கிரணங்கள் மறையாநிற்குங் குற்றுடைவாளோடு செழிய பிரகாசத்தையுடைய கூர்மையான
வேலாயுதத்தையும் அளித்தார்கள்.
663.
இவையெ லாநபிக்
களித்த பினேவலி னியலுறு மைசறாவை
நவைய றத்தன
தருகினி லிருத்திவெண் ணகைமலர் முகநோக்கிப்
புவியி னின்னிலு மெனக்குரி
யவரிலைப் பொருளுநின் பொருளேயா
மவய வந்தனைக்
காப்பவர் போனபிக் கடுத்தினி துறைவாயே.
67
(இ-ள்)
கதீஜா அவர்கள் இந்தப் பொருள்களனைத்தையும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குக்
கொடுத்தபின்னர், ஏவலினது இயல்பு பொருந்திய மைசறா வென்பவனைக் குற்றமற்றத் தங்களது பக்கத்திலழைத்திருத்தி
வெள்ளிய பிரகாசத்தையுடைய அவனது தாமரைப் பூப்போன்ற முகத்தைப் பார்த்து இந்தப் பூலோகத்தின்கண்
உன்னைப் பார்க்கிலும் எனக்குச்சொந்தமானவர்கள் வேறே யொருவருமில்லர். என்னுடைய பொருள்கள்
யாவும் உன்னுடைய பொருளேயாகும். ஆதலால் நீ இந்த நபிகணாயகமவர்கள் சாமிராச்சியத்திற்குப்
போய் மீண்டுவருமளவும் சரீரத்தின் கண்ணுள்ள அவயவங்களைக் காக்கின்றவர்களைப் போல எப்போதும்
அவர்களின் சமீபத்திலேயே வீற்றிருப்பாயாக.
664.
ஏகும் பாதையிற் பண்டித
னொருவனுண் டியன்மறை வழிதேர்ந்த
வாக னெம்மினத்
தவரிலு முரியவன் மகிழ்ந்தவ னிடத்தேகி
நீக ருத்துட னெனுதுச
லாமையு நிகழ்த்திநள் ளிருட்போது
மோக முற்றியான்
கண்டுடிங் கனவினை மொழியென மொழிவாயே.
68
(இ-ள்)
மேலும் நீங்கள் பிரயாணமாய்ப் போகின்ற வழியில் ஒரு பண்டிதனுண்டு. அவன் இயல்புதங்கிய முன்வேதங்களி
னொழுங்குகளைக் கற்றுத் தெளிந்த அழகையுடையவன். அன்றியும் எமது பந்துக்களிலுமெமக்குச் சொந்தமானவன்.
நீ கருத்தோடு மகிழ்ச்சி அடைந்தவனிடத்திற்போய் அவனுக்கு எமது வந்தனத்தையுங்கூறி யாம் நடு
இராத்திரியில் காதலித்து
|