ப
முதற்பாகம்
பார்த்திடுஞ் சொப்பனத்தை
அவன் சொல்லென்றதின் பின்னர் சொல்லுவாயாக.
665.
பாதை யுற்றிடுஞ் செய்தியு
மிவர்க்கிடர் பணித்தவர் தமக்கான
வாதை யுற்றிடு வருத்தமுங்
காரணத் தொகுதியும் வனஞ்சார்ந்த
போதி னிற்பெரும்
புதுமையு மிங்கிவர் பொறுமையு நகர்சேர்ந்து
சூதர் தம்மொடு
மிருப்பது மினமெனச் சூழ்ந்தவர் வரலாறும்.
69
(இ-ள்)
மேலும் நீங்கள் போகின்ற வழியின்கண் பொருந்திடுஞ் சமாச்சாரங்களையும், இந்நபிகள் பெருமானவர்களுக்குத்
துன்பத்தைச் செய்தவர்களுக்காகவும் வேதனைதங்கிய வருத்தங்களையும், அதனால் உண்டாகுங் காரணத்தினது
சேர்மானங்களையும், காடு போய்ச் சேர்ந்த பின்னர் அவ்விடத்திலடைகின்ற அற்புதங்களையும்,
இங்கிருக்கப்பட்ட இந்நபியவர்களின் பொறுமையையும், ஷாம் நகரத்தையடைந்து அவ்வூரிலுள்ள சூதர்களுட
னிருப்பதையும், பந்துக்களைப் போலப் பக்கத்தில் வளைந்தவர்களின் வரலாற்றையும்.
666.
இற்றை நாட்டொடுத்
தந்நகர்க் கேகியிங் கிவண்புக வருநாளை
யற்றை நாளைக்குங்
கண்டிடுங் காரண மனைத்தையுந் துடராக
ஒற்றர் தம்வயி னெழுதியிங்
கனுப்பியென் னுறுவிழி மணிபோலுங்
குற்ற மில்லதோர்
நபியுடன் வருகென வுரைத்தனர் குலமாதே.
70
(இ-ள்) இன்றையத் தினமுதல் அந்தச் சாமிராச்சியத்திற்குப் போய் அங்கு முடிக்கவேண்டிய காரியங்களெல்லாவற்றையு
முடித்துக் கொண்டு இவ்விடத்தைப் பொருந்தும்படி திரும்பி வருகின்ற தினமாகிய அத்தினம் வரைக்கும்
இடையிலுள்ள எல்லா நாள்களிலும் தோற்றிடுங் காரணங்கள் முழுவதையுந் துடராக எழுதித் தூதுவர்களின்
கையில் கொடுத்து இவ்விடத்திற் கனுப்பிவிட்டுப் பொருந்திய எமது கண்மணிபோன்ற ஒப்பில்லாத
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுடன் குற்றமில்லாது நீ வருவாயாகவென்று மேன்மை தங்கிய
மாதான அக்கதீஜா அவர்கள் சொன்னார்கள்.
667.
இத்தி றத்துரை பகர்ந்தன
ரழகொளி ரிளமயின் முகநோக்கி
மத்த கக்கட கரிமுகம்
மதினெழின் மலரடி யிணைபோற்றி
யுத்த ரப்படி பணிகுவ
னவரையென் னுயிரினு மிகக்காத்து
முத்தி ரைப்படி வருகுவன்
காணென மொழிந்தடி பணிந்தானே.
71
|