பக்கம் எண் :

சீறாப்புராணம்

264


New Page 1

முதற்பாகம்
 

     (இ-ள்) இத்தன்மையான வார்த்தைகளைச் சொல்லிய அழகானது பிரகாசியாநின்ற இளமயிலான கதீஜா அவர்களின் முகத்தை மைசறாவென்பவன் பார்த்து மத்தகத்தையுடைய மதத்தினைப் பொழியாநிற்கும் ஆண் யானை போன்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகிய தாமரைமலர்போன்ற இரண்டு பாதங்களையுந் துதித்து உத்திரப்பிரகாரம் பணிந்து நடப்பேன். அன்றியும், முத்திரைப்படி அவர்களை எனது ஜீவனைப் பார்க்கிலும் அதிகமாகக் காப்பாற்றி கூடவேவந்து சேருவேன். நீங்கள் பாருங்களென்று சொல்லி அக்கதீஜா அவர்களின் திருவடிகளை வணங்கினான்.

 

668. முருகு லாங்குழன் மயிலபுத் தாலிபு முழுமதி முகநோக்கி

    யரசர் நாயக நின்மனைக் கெழுகென வுரைத்தலு மவர்போந்தார்

    பரிச னங்களும் வணிகருஞ் சூழ்தரப் பாதமென் மலர்பாரிற்

    றெரித ராமுகம் மதுநபி யாத்திரைத் திரளொடு மெழுந்தாரே.

72

     (இ-ள்) அப்போது தேனானது உலாவப்பெற்ற கூந்தலையுடைய மயிலாகிய கதீஜா அவர்கள் அபீத்தாலிபவர்களின் பூரணச்சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து அரசர்களுக்கெல்லாம் நாயகமானவர்களே! தங்களது வீட்டிற்கு எழுந்தருளுங்களென்று கூறிய மாத்திரத்தில், அவர்கள் எழும்பிப் போய்விட்டார்கள். பின்னர் பாதங்களாகிய மெல்லிய தாமரை மலர்கள் பூமியின்கண் தோற்றாத நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தங்களது பரிவாரங்களும் மற்றும் கச்சவடக்காரர்களும் தங்களைச் சூழும்படி யாத்திரைத் திரளோடும் பிரயாணப்பட்டார்கள்.

 

669. கூன்றொ றுத்தொறும் பொதியெடுத் தேற்றிய குழுவிடை நயினாரு

    மேன்ற தம்மிரு கரத்தினும் பொதியிரண் டெடுத்தெடுத் தினிதேற்றிச்

    சான்ற பேர்கட மனத்ததி சயமுறத் தையறன் மனைநீங்கித்

    தோன்ற தோன்றின ரணிமணி மறுகிடை சுடர்விடு மதியேபோல்.

73

     (இ-ள்) அப்பொழுது ஏவற்காரர்கள் கூனையுடைய ஒட்டகங்கள்தோறும் சுமைகளை எடுத்தேற்றிய கூட்டத்தினிடையில் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் இரண்டு சுமைகளைப் பொருந்திய தங்கள் இருகைகளினால் இனிதோடு மெடுத்தெடுத் தேற்றி மேன்மையையுடைய ஜனங்கள் யாவர்களும் தங்கள் மனசின்கண் அதிசயம்பெருக அக்கதீஜா அவர்களின் வீட்டைவிட்டும் நீங்கி