பக்கம் எண் :

சீறாப்புராணம்

265


முதற்பாகம்
 

அழகிய இரத்தின வர்க்கங்களையுடைய வீதியின்கண் அரசராகிய அந்நபிகணாயகமவர்கள் பிரகாசத்தை விடாநின்ற சந்திரனைப் போலப் பிரசன்னமானார்கள்.

 

670. அருத்த வத்தபூ பக்கருஞ் சுபைறுட னாரிது மப்பாசுந்

    திருந்தி லாமனத் தபுசகு லொடுங்கலை தெரிதரு மைசறாவும்

    பொருந்தக் கூடிய மாக்களு மிடபமும் புரவியும் துகளார்ப்ப

    வருந்தி லாப்பெரு வாழ்வுகொண் டுறைதரும் வளநகர்ப் புறத்தானார்.

74

     (இ-ள்) அந்தச்சமையம் அரிதான தவத்தையுடைய அபூபக்கரவர்களும் சுபைறொடு ஆரிதும் அப்பாசும் சன்மார்க்கத்தில் திருந்தாத மனத்தினையுடைய அபூஜகிலொடு சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த மைசறாவும் அவ்விடத்தில் கச்சவடத்திற்காக பொருந்தும்படி கூடிய மற்றும் ஜனங்களும் எருதுகளையும் குதிரைகளையும் நடத்துதலினாலுண்டாகும் துகளானது எவ்விடங்களையும் நிறைக்க வருத்தமில்லாத பெரியவாழ்வு பெற்றுறையாநிற்கும் செல்வத்தையுடைய மக்கமா நகரை விட்டும் வெளியிலாயினார்கள்.

 

671. ஊறு நீர்த்தடக் கரைகளுங் குட்டமு மோடையு மலர்க்காடுந்

    தேற றூற்றறிய சோலையு மரம்பையின் றிரளிடை பழக்காடுங்

    கூறு கூறுகொண் டிடுகிடங் கிடைச் சிறு கொடியிலைக் கொடிக்காலுஞ்

    சாறு கொண்டெழு மாலையுங் கன்னலஞ் சாலையுங் கடந்தாரே.

75

     (இ-ள்) அவ்விதம் பிரயாணமான யவர்களும் சுரக்காநின்ற சலத்தினையுடைய குளக்கரைகளையும் குளங்களையும் ஓடைகளையும் மலர்க்காடுகளையும் தேனைச் சொரிகின்ற சோலைகளையும் கூட்டமாகிய வாழைகளினிடையிலுள்ள பழக்காடுகளையும் பகுதி பகுதியாகக் கொள்ளாநின்ற கிடங்குகளினிடத்துற்ற சிறியகொடியினையு மிலைகளையுமுடைய கொடிக்கால்களையும் சாற்றினைப் பெற்றோங்காநிற்கும் ஆலைகளையும் அழகிய கன்னற் சாலைகளையுந் தாண்டினார்கள்.

 

672. கடந்து காவத நடந்தொரு பொழிலிடை காளைக ளனைவோரு

    மிடம்பெ றத்திரண் டிறங்கியங் குறைந்தன ரிருட்பொழு தினைப்போக்கி

    விடிந்த காலையின் முன்னிலை யெவரென விளம்பின் ரவரோடு

    மடைந்த பேர்களின் முகம்மது முதலென அபூபக்க ரறைந்தாரே.

76