முதற்பாகம்
(இ-ள்) ஷாம் நகரத்திற்குப் பிரயாணப்பட்ட காளைப் பருவத்தையுடைய யாவர்களும் மேற்கூறியவைகளனைத்தையுந்
தாண்டிக் காதவழி தூரம் நடந்து சென்று, தங்கியிருத்தற்குரித்தான ஒரு சோலையின் கண்ணிறங்கி
விசாலமாக ஒன்றுகூடி அவ்விடத்தில் வாசஞ்செய்து இராக்காலமுழுவதையும் கழித்துச் சூரியன் உதையமானபோது
சிலபேர்கள் நம்மனைவோர்களுக்கும் வழிகாட்டியாக முன்னிலையில் நடப்பவர்கள் யாவரென்று கேட்டார்கள்.
அவ்வாறு கேட்கவே அவர்களோடும் அபூபக்கரவர்கள் இங்குவந்து சேர்ந்த ஜனங்களில் முன்னிலைக்குத்
தகுதியானவர் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களென்று சொன்னார்கள்.
673.
முகம்ம தென்றுரை கேட்டலு
மபுசகல் மனத்திடை தடுமாறி
மிகமு னிந்தன னிவர்தமை
முன்னிலை விலக்குவ துனக்காகா
திகழெ னப்பலர் கூறவுங் கேட்டில
னிதற்குமுன் னிலையானென்
றகம கிழ்ந்திட நடந்தனன் கெடுமதி
யடைவது மறியானே.
77
(இ-ள்) கேட்டைத் தராநின்ற
புத்தியானது தன்னைவந்து சார்வதையு முணராதவனான அபூஜகில் அவ்வண்ணம் முகம்மது முன்னிலையென்று
அபூபக்கரவர்கள் கூறிய வார்த்தைகளைக் காதுகளினாற் கேட்டமாத்திரத்தில் மனசின்கண் தடுமாற்றமுற்று
மிதவாகக் கோபித்தனன். இந்த முகம்மதை முன்னிலையை விட்டும் விலக்குவது உனக்காகாது. ஆதலால்
நீ அதைவிட்டு விடென்று அக்கூட்டத்திலுள்ள பலபேர்கள் தடுத்துச் சொல்லியும் அதைச் சம்மதித்திலன்.
அன்றியும், மனமானது மகிழ்ச்சி யடையும்படி இக்கூட்டத்திற்கு முன்னிலை யானென்று யாவர்களுக்கும்
முன்னால் நடந்து சென்றான்.
674.
ஒட்டை மீதினில் வரும்பொழு
தவ்வழி யோரிடத் திடையூறாய்க்
கட்டை தட்டிட வொட்டையுஞ்
சாய்ந்தொரு கவிழொடு தலைகீழாய்
முட்டி வீழ்ந்தனன் குமிழினும்
வாயினு முழுப்பெருக் கெனச்சோரி
கொட்டி னானெழுந் தானபு சகுலெனுங்
கொலைமனக் கொடியோனே.
78
(இ-ள்) அவ்வாறு அபூஜகிலென்று
சொல்லுங் கொலைபொருந்திய மனத்தினையுடைய அக்கொடியவன் முன்னிலையாகத் தனது ஒட்டகையின்மீது
வருஞ் சமயம், அப்பாதையின் கண்ணுள்ள ஒரு ஸ்தலத்தில் இடையூறாக ஒரு கட்டையானது அவ்வொட்டகையின்
காற்களில் இடரவே, அந்த ஒட்டகமும் சாய்ந்து தானும் ஒருபுறத்துக் கன்னத்துடன் தலைகீழாய்ப் பூமியின்கண்
மோதிவீழ்ந்தான். நாசியிலும்
|