வ
முதற்பாகம்
வாயிலுமிருந்து பூரணப்பட்ட
பிரவாகத்தைப் போல இரத்தத்தைச் சிந்தினான். பின்னர் தரையைவிட்டு மெழும்பினான்.
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
675.
உதிரங்கொப்
பிளித்து முகமழிந் துடைந்தான்
முகம்மதை
யுறுதிகே டாக
நிதமுரைத்
ததனா லபூசகு லினமு
நிலைகுலைந்
திடுவது நிசமென்
றதிர்தர
வுரைத்துப் பல்லருங் கூண்டிவ்
வாற்றிடை முன்னிலை யானோன்
மதுரமென்
மொழியா னுத்துபா வலது
மறுத்தெவ
ருளரெனத் தேர்ந்தார்.
79
(இ-ள்)
அக்கூட்டத்திலுள்ள பலபேர்களும் ஒன்றாகக்கூடி அபூஜகில் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை
யுறுதிகேடாகப் பிரதிதினமும் பேசினதினால் இரத்தங்கக்கி முகமானது அழியப் பெற்றுத் தகர்ந்தான்.
இன்னமும் அவன் தனது நிலைமையை விட்டுங் குலைவது சத்தியமென்று யாவர்களுங்கேட்கும்படி முழக்கமாகக்
கூறி இப்பாதையின்கண் இனிமேல் முன்னிலையானவர் மதுரமமைந்த மெல்லிய வார்த்தைகளை யுடையவனான
உத்துபாவென்பவனல்லாமல் வேறே யாவருளர்? ஒருவருமில்லரென்று தெளிந்தார்கள்.
676. கூறுமென்
மொழியா னுத்துபா வென்னுங்
குரிசில்பி னியாவரு நடந்து
தூறடை நெறியுஞ்
சிறுபரற் றிடருந்
தொலைந்திடுங்
காலையி லாங்கோர்
மாறுகொண் டெழுந்து
குயவரி சினந்து
வருவது கண்டுடல் கலங்கி
யாறிடை வீழ்ந்தான்
முன்னிலை யிளவ
லனைவரும் பயந்திட வன்றே.
80
(இ-ள்)
புகழாநிற்கு மெல்லிய வார்த்தைகளை யுடையவனான உத்துபாவென்னு மவ்விறைவனது பின்னர் அக்கூட்டத்திலுள்ள
யாவர்களும் சிறுசெடிகள் பொருந்திய பாதைகளையும் சிறிய பரற்கற்களையுடைய திடருகளையும் தொலைத்து
நடந்து சென்றிடுஞ் சமயத்தில், அவ்விடத்தில் ஒரு வேங்கையானது பகைமைகொண்டெழும்பிக் கோபித்து
எதிரில் வருவதை முன்னிலையாக நடக்கும் இளம்பருவத்தை யுடைய அவன் பார்த்து தன்னோடுள்ள யாவர்களும்
பயங்கரங் கொள்ளும்படி சரீரமானது கலக்கமுற்றுப் பாதையின்கண் விழுந்தான்.
|