முதற்பாகம்
679. அலரிவெண்
டிரைமே லெழுந்தனன் கீழ்பா
லனைவரு
மெழுகவென் றெழுந்தார்
நிலைதளர்ந்
திருந்த வுத்துபா வென்போ
னெறியின்முன்
னிலைநடப் பதற்கோர்
தலைவரை வேறு
நிறுத்துமென் றுரைத்த
தன்மைகேட்
டனைவரும் பொருந்தி
யிலைமலி வேலா
னாசெனுங் குரிசின்
முன்னிலை யெனவெடுத் திசைத்தார்.
83
(இ-ள்)
அப்பொழுது சூரியனானவன் யாவர்களு மெழும்புங்களென்று கீழ்பக்கத்திலுள்ள வெள்ளிய அலைகளையுடைய
சமுத்திரத்தின் மேல் எழும்பினான். உடனே நித்திரை செய்த அனைவர்களும் விழித்தெழும்பினார்கள்.
அப்போது தனது நிலைமையானது தளர்ச்சியுற்றிருந்த அவ்வுத்துபா வென்பவன் பாதையின்கண் முன்னிலையாக
நடப்பதற்கு வேறெயொரு தலைவரை நிறுத்துங்களென்று சொல்லிய தன்மையினை அனைவர்களும் கேட்டு அதற்குச்
சம்மதித்து இனி இலைகள் மிகுந்த வேலினை யுடையவனாகிய ஆசென்னு மிறைவன் முன்னிலையென்று எடுத்துச்
சொன்னார்கள்.
|