பக்கம் எண் :

சீறாப்புராணம்

270


முதற்பாகம்
 

சுரத்திற்புனலழைத்த படலம்

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

     680. முன்னிலை யாசு நடந்திட நடந்து

              முதிரட விகள்கடந் ததற்பின்

         றன்னிக ரில்லான் றிருவுளப் படியாற்

              றரையினிற் சபுறயீ லிறங்கி

         யிந்நிலத் தெவர்க்குந் தெரிகிலா வண்ண

              மிளம்பிடி யொட்டையொன் றெளிதாய்ப்

         பன்னரும் பாதை தலைதடு மாறப்

              பண்பொடு கொடுநடத் தினரே.

1

     (இ-ள்) பாதையின்கண் முன்னிலையாக ஆசு என்பவன் நடந்திட யாவர்களும் பின்னால் நடந்துசென்று முதிர்ந்த வனங்களைத் தாண்டி அதன் பிறகு, தனக்கு யாதொரு உவமையுமில்லாதவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் திருச்சித்தத்தின்படி ஜிபுறீல் அலைகிஸ்ஸலாமவர்கள் ஆகாயத்தை விட்டும் பூமியின் கண்ணிறங்கிச் சொல்லுதற்கரிய இவர்களின் பாதையானது இலேசாகத் தடுமாற்றமுற இவ்வுலகத்தின் கண்ணுள்ள யாவர்கட்குந் தோற்றாத வண்ணம் இளம்பருவத்தை யுடைய ஒரு பெண் ணொட்டகத்தை ஆசென்பவனின் ஒட்டகத்தின் முன்னால் பண்புடன் கொண்டு நடத்தினார்கள்.

 

     681. மட்டவிழ் புயத்தா னாசுமுன் னடத்தி

              வந்தவொட் டகம்புது மையதாம்

         பெட்டையொட் டகத்தைக் கண்டுபின் றொடரப்

              பிசகின தருநெறி கானிற்

         செட்டரு மெருதும் புரவியு மிடைந்து

              சிறுநெறி வயின்வெகு தூர

         மெட்டிமுன் னடப்பச் சிறுநெறி குறுகி

              யிருந்ததுந் தேய்ந்துபோ யதுவே.

2

     (இ-ள்) தேனானது அவிழாநிற்கும் மலர்மாலை யணிந்த தோள்களையுடையவனான ஆசென்பவன் முன்னிலையாக நடந்துவந்த ஆணொட்டகமானது ஜிபுறீல் அலைகிஸ்ஸலாமவர்கள் அதன் முன்னால் நடத்திடும்