முதற்பாகம்
நூதனமாகிய பெண்ணொட்டகத்தைப்
பார்த்து அதைப் பின்பற்றவே, அவர்கள்சென்ற அந்தக்காட்டில் அரிதான பாதையானது பிசகினது.
வியாபாரப் பொருள்களையுடைய அரிய எருதுகளும் குதிரைகளும் வசக்கேடுற்றுச் சிறிய ஒரு பாதையினிடமாகத்
தாவி அதிக தூரமுன்னால் நடக்க அந்தச் சிறிய பாதையுங் குறுகி இருந்ததும் இல்லாமல் தேய்ந்து
போய்விட்டது.
682. ஆசெனு மரச
னொட்டகக் கயிற்றை
யசைத்திடுந்
திசையெலா நடப்ப
வாசியு
மெருதுங் கூன்றொறுத் தொகையும்
வழிகெடத்
தனித்தனி மறுகத்
தேசிகர் கலங்கி
யாமிதற் கென்கொல்
செய்குவ
தெனமன மிடைந்து
வீசிய கானல்
சுடச்சுடக் கருகி
விடர்விடும்
பாலையி லடைந்தார்.
3
(இ-ள்)
அப்போது ஆசென்று சொல்லா நிற்கும் அரசனானவன் தனது ஒட்டகத்தினது நாணயக்கயிற்றை ஆட்டிடுந் திக்குகளெல்லாவற்றிலும்
அவ்வொட்டகம் நடக்கவும், குதிரைகளும் இடபங்களும் கூனலையுடைய ஒட்டகக் கூட்டங்களும் பாதையானது
கெட்டுப்போகவே, தனித்தனியாகவே நின்று மறுக்க மடையவும் தேசாந்தரிகளாகிய அவர்கள் யாவர்களும்
கலக்கமடைந்து நாம் இவ்விபத்திற்கு யாது செய்குவதென்று மனமானது வசக்கேடுற்று எவ்விடமும் எறிந்த
வெயிலின் வெப்பமானது தங்களது தேகத்தை அதிகமாகச் சுடும்படி தீய்ந்து பிளவுகளை விடாநின்ற ஒரு
பாலை நிலத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
683. பின்னிய திரைவா
ருதியினைச் சுவற்றிப்
பெரும்புறக் கடலினைத் தேக்கித்
தன்னகங் களித்து
வடவையின் கொழுந்து
தனிவிளை
யாடிய தலமோ
பன்னருந் தென்கீழ்த்
திசையினன் றிரண்ட
படையொடு
மிருந்தபா சறையோ
உன்னதக் ககன
முகடற வுருக்கு
முலைகொலோ
வெனவறி கிலமால்.
4
(இ-ள்)
அப்பாலை நிலமானது பின்னுதலைக் கொண்ட அலைகளையுடைய கடலினை வற்றச் செய்துப் பெரிதான புறச்சமுத்திரத்தைக்
குடித்துத் தனது மனஞ் சந்தோஷமடைந்து வடவாமுகாக்கினியின் சுவாலையானது ஏகமாயிருந்து விளையாடிக்
கொண்டிருந்த தலமோ? அல்லது சொல்லுதற் கரிய
|