பக்கம் எண் :

சீறாப்புராணம்

272


முதற்பாகம்
 

தென்கீழ்த் திசையையுடையவனான அக்கினிதேவன் தனது கூட்டமாகிய சேனைகளோடும் தங்கியிருந்த பாசறையோ? மேலான ஆகாயத்தின் உச்சியானது அற்றுப் போகும்படி யுருக்காநின்ற வுலைக்கூடமோ? இவற்றில் இன்னதென்று யாம் அறிந்திலோம்.

 

     684. பருந்திருந் தெழுந்து பறந்தசின் னிழலும்

              பற்றறாக் கானலிற் றேய்ந்த

         கரிந்திலை தோன்றா தொவ்வொரு விருக்கங்

              கணங்களின் குலமெனத் தோன்று

         மெரிந்தெரி மேய்ந்து கரிந்துவிண் ணிடங்காந்

              திடுந்தரை யொருதுளி நீரு

         மருந்திடைக் கிடையா தலகைக டிரிந்தங்

              காள்வழக் கற்றவெங் கானம்.

5

     (இ-ள்) அன்றியும், பருந்துகளானவை இருந்து எழும்பிப் பறந்த சிறிய நிழல்களும், பற்றுதலற்றுத் தேய்ந்த அவ்வெயிலினால் இலைகளானவை யனைத்துந் தீய்ந்து வெளியினிற்றெரியாது ஒவ்வொரு விருட்சங்களும் பிசாசங்களின் கூட்டத்தைப்போல விளங்காநிற்கும், மேலும் அக்கினியானது எவ்விடமும் எரிந்து அங்குள்ள புற்பூடாதிக ளெல்லாவற்றையுஞ் சாப்பிட்டு ஆகாயமுங்கரிந்து சுடாநிற்கும் அந்தப் பூமியின்கண் குடிப்பதற்கு ஒரு துளி ஜலமாவது அகப்படாது. இன்னம் அங்கு பிசாசங்கள் திரிந்து மனுஷியர்களின் நடபடியற்ற வெவ்வியகானகம்.         

 

     685. பாலையென் றுலர்ந்த செந்நிலக் கானற்

              பரப்பினைப் புனலென வோடிச்

         சாலவு மிளைத்துத் தவித்துழை யினங்க

              டனித்தனி மறுகிய மறுக்க

         மாலுளர்ந் திருண்ட புன்மனச் சிறியோர்

              மருங்கினி லிரந்திரந் திடைந்து

         காலறத் தேய்ந்த பலகலை மேலோர்

              கருத்தினில் வருத்தமொத் தளவே.

6

     (இ-ள்) அன்றியும், மானினது கூட்டங்கள் பாலையென்று சொல்லும்படி காய்ந்த செந்நிறத்தின் நிலமாகிய வெயிலினையுடைய பரப்பை நீரென்று நினைத்து ஓடி மிகவுமிளைப்புற்றுத் தாகத்தையடைந்து ஒவ்வொன்றாக மறுகிய மறுக்கமானது மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்னு முவ்வாசையினது மயக்கத்தினாற் சுழற்சிதங்கிக் கறுத்த கீழ்மையான மனத்தையுடைய சிறியோர்களின் பக்கத்தில் யாசித்து