பக்கம் எண் :

சீறாப்புராணம்

273


முதற்பாகம்
 

வசக்கேடுற்றுக் காலமுழுவதுந் தேய்ந்த பல சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்த மேலோர்களது சிந்தையின்கண்ணுள்ள வருத்தத்தை நிகர்த்திருந்தது.

    

     686. கள்ளியின் குலங்கள் வெந்தொடுங் கினவேர்க்

              கட்டையி னுட்டுளைக் கிடந்து

         புள்ளிபூத் திருந்த பைத்தலைப் பாந்தள்

              புறந்திரிந் துறைந்திடா திறந்து

         முள்ளெயி றொதுங்கிச் செம்மணி பிதுங்கி

              முளைதொறுங் கிடப்பதைச் செறிந்த

         கொள்ளியிந் தனங்க ளென்றுழைக் குலங்கள்

              குறுகிடப் பயந்துகான் மறுக்கும்.

7

     (இ-ள்) அன்றியும், அப்பாலைநிலத்திலுள்ள கள்ளியினது கூட்டங்கள் சூரிய வெப்பத்தினால் அவிந்து ஒடுக்கமுற்ற வேர்க்கட்டைகளின் அகத்துவாரங்களில் புள்ளிகள் பூத்திரா நிற்கும் படா மகுடத்தினையுடைய சர்ப்பங்கள் அவ்வெப்பத்தினால் வெளியில் உலாவி மீளவும் அங்கு சென்று தங்கிடாது கிடந்து இறந்து அவற்றின் தாழை முட்கள் போன்ற மடங்குதலாகிய பற்கள் ஒதுங்கிச் செந்நிறத்தையுடைய மணிகள் பிதுங்கி முளைகள் தோறுங் கிடப்பதை மான்கூட்டங்கள் கண்டு இவைகள் நெருங்கிய சுவாலைகளையுடைய நெருப்பெரியுங் கொள்ளிகளென்றும் அவ்விடத்தில் செல்ல அச்சங்கொண்டு நின்று காற்கள் மறுக்கமடையும்.

 

     687. மூவிலை நெடுவேற் காளிவீற் றிருப்ப

              முறைமுறை நெட்டுடற் கரும்பே

         யேவல்செய் துறைவ தலதுமா னிடர்கா

              லிடுவதற் கரிதுசெந் நெருப்புத்

         தாவியெப் பொருப்புங் கரிந்தன சிவந்து

              தரைபிளந் தனவதிற் பிறந்த

         வாவியோ வெழுந்த புகைபரந் ததுவோ

              வறக்கொடுங் கானலென் பதுவே.

8

     (இ-ள்) அன்றியும், அப்பாலைநிலத்தில் முக்கவராகப் பொருந்திய இலைகளையுற்ற வேலாயுதத்தையுடைய காளியென்னும் பிசாசமானது வீறுடனிருக்க, நெடிய உடல்களையுடைய கரிய பேய்கள் வரிசை வரிசையாய் ஏவல் புரிந்து தங்குவதல்லாது மானிடர்கள் கால் வைப்பதற்கும் அரிதாகும். மேலும் சிவந்த நிறத்தையுடைய நெருப்புத் தாவலுற்று எல்லா மலைகளும் கரிந்தன. தரைகள் சிவப்படைந்து பிளந்தன. ஆனால் முழுக்கொடுமையையுடைய கானலென்று சொல்லுவது