முதற்பாகம்
அவ்விதங் கரிந்து
பிளப்புற்றவைகளி லிருந்துண்டாகும் ஆவியோ? அல்லது ஓங்கிய புகையானது பரந்ததுவோ? இன்னதென்று
யாமறியோம்.
688. சேந்தெரி
பரந்த பாலையிற் புகுந்து
சென்னெறி
சிறிதுந்தோன் றாமற்
காந்தெரி கதிரோ
னெழுதிசை தெற்கு
வடக்குமேற்
கெல்லைகா ணாமன்
மாந்தரு
மாவுந் திசைதடு மாறி
வாயினீ
ரறவுலர்ந் தொடுங்கி
யேந்தெழில்
கருகி மனமுடைந் துருகி
யெரிபடு
தளிரையொத் திடுவார்.
9
(இ-ள்)
அவ்விதம் சிவந்து அக்கினிப் பரப்புற்ற அந்தப் பாலை நிலத்தின்கண் வியாபாரிகளான அம்மனுஷியர்களும்
குதிரை ஒட்டகம் இடப முதலிய மிருகங்களும் நுழைந்து செல்லும் பாதையானது கொஞ்சமேனுந் தெரியாது
சுடாநின்ற தீயினது கிரணங்களையுடைய சூரியனுதயமாகும் திசையாகிய கிழக்கு தெற்கு வடக்கு மேற்கு என்னும்
நான்கெல்லைகளுந் தோற்றாமல் தடுமாற்றமுற்று வாயிலுள்ள உமிழ்நீர் முழுவதுங் காய்ந்து சோர்வடைந்து
சரீரத்தின்கண் தாங்குகின்ற அழகானதும் தீய்ந்து மனமுடைந்து கரைதலுற்று நெருப்பிற்பட்ட தளிரை
நிகர்த்தார்கள்.
689. மன்னவ னாசு
முன்னடந் ததற்கோர்
வல்வினை
பின்றொடர்ந் ததுவோ
வின்னைநா
ளகில மடங்கலுந் தழலா
லெரிபடுங்
காரணந் தானோ
முன்னைநாள்
விதியோ நகரைவிட் டெழுந்த
முகுர்த்தமோ
பவங்கண்முற் றியதோ
பன்னுதற் கெவையென்
றறிகுவோங் கொடியேம்
பாதையிற்
படும்வர லாறே.
10
(இ-ள்)
அன்றியும், இப்பாதையின்கண் படாநிற்கும் வரலாறானது அரசனாகிய ஆசென்பவன் முன்னிலையாகச் சென்றதற்கு
ஒரு வலிய வினையானது வந்து பின்பற்றியதோ? அல்லது உலகமெல்லாம் இந்தநாளில் அக்கினியால் எரிபட்டிடுங்காரணமோ?
ஆதிகாலத்தின் விதிப்பயனோ? நாம் அனைவரும் நமதூராகிய திருமக்கமா நகரத்தை விட்டும் எழும்பிய
சுபவேளையோ? நமது பாவங்களனைத்து மொன்றுகூடி முதிர்ந்ததுவோ? கொடுமையையுடையோமாகிய யாம் இவற்றில்
சொல்லுதற்கு எவையென்று தெரிகுவோ மென்ன.
|