பக்கம் எண் :

சீறாப்புராணம்

27


முதற்பாகம்
 

                    எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம

 

     38. ஏரியை யுடைத்துக் குளங்கரை தகர்த்தே

             யிடிபட வணையினை முறித்துச்

        சேரியுட் பரந்து கொல்லையுட் புகுந்து

             செழுங்கருப் பாலையைச் சாய்த்து

        வேரியஞ் சலசக் கழனியை யுழக்கி

             விரிதலை யரம்பையைத் தள்ளி

        வாரியிற் செறிந்து பணையெலா நிரப்பி

             மட்டிலா மலிந்தன வனமே.

18

      (இ-ள்) அன்றியும், அந்த நீரானவை ஏரியையுடையச் செய்து குளங்களினது கரைகளைப் பொடித்து இடிபடும்படி அணையை முறியப் பண்ணிச் சேரினகம் பரவித் தோட்டங்களில் நுழைந்து செழிய கரும்பினது ஆலையைச் சரித்து வாசனையையுடைய அழகிய தாமரை மலரினது வயல்களையுழக்கி விரிந்த சிரத்தையுடைய வாழை மரங்களைத் தள்ளி மடைகளில் நெருங்கிக் கழனிக ளெல்லாவற்றையும் நிரப்பி அளவில்லாது பெருகின.

 

கலிநிலைத்துறை

 

39. அலையெ றிந்திரு கரைவழி யொழுகுகம் பலையுங்

   கலையும் வெள்ளனஞ் சிறைவிரித் தசைத்த கம்பலையு

   மலைதி றந்தன மதகின்வாய் வழிந்தகம் பலையுஞ்

   சிலைத ரித்தபே ரொலிபெரும் படையொலி சிறக்கும்.

19

     (இ-ள்) அன்றியும், திரைகளை வீசி இரு கரையினது மார்க்கமாய் ஒழுகுகின்ற ஓசையும், கலையாநிற்கும் வெண்ணிறத்தையுடைய அன்னப் பட்சிகள் தங்களின் சிறகுகளை விரித்தாட்டிய ஓசையும், மலைகளைத் திறந்தவற்றைப் போன்று மதகினிடத்து வழிந்த ஓசையும், கோதண்டத்தை யணிந்த பெரிய சத்தத்தையுடைய பெருஞ்சேனையினது ஓசையைப் பார்க்கிலும் சிறப்புறும்.

 

40. முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்க

   நிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க ணெருங்கிச்

   செறிக டக்களி றினமென வயின்வயின் றிரண்டு

   மறிபு னற்கரை யிடந்தொறுஞ் செறிந்தனர் மலிந்தே.

20

     (இ-ள்) அன்றியும், உழவர்கள் செறித லுற்று வரிசை வரிசையாக அந்த மருத நிலத்தினது பறையின் ஓசையானது சமுத்திரத்தைப் போலச் சத்திக்க நிறைந்த தங்களின் சேரியை விட்டும் எழுந்து பொருந்திய மதத்தைக் கொண்ட யானைகளின் கூட்டத்தைப் போலும் இடங்கள் தோறுங் கூடி மறியாநிற்கும்