முதற்பாகம்
நீரையுடைய
கரைகளினிடங்க ளெல்லாவற்றிலும் பெருக்க முற்று நெருங்கினார்கள்.
41.
மட்டு வாய்வயி
றாரவுண் டெண்ணிலா மள்ளர்
கொட்டு
வாங்கியே யிருபுயங் குலுங்கிடக் கரண்கள்
வெட்டு
வார்சிலர் மென்கரத் தேந்தியே வரம்பு
கட்டு வாரடைப்
பார்திசை தொறுங்கணக் கிலையே.
21
(இ-ள்) அவ்வாறு நெருங்கிய
கணக்கற்ற உழவர்கள் மதுவை வாயும் வயிறும் நிறையும் வண்ணம் அருந்திக் கொட்டு வாங்கி இரண்டு
தோள்களும் குலுங்கும் படி கரண்களை வெட்டுவார்கள். அதைச் சிலர் தங்களின் மெல்லிய
கைகளிலேந்தி வரம்புகளைக் கட்டுவார்கள், அடைப்பார்கள், திசைகள் தோறும் இப்படிச்
செய்யப்பட்டவர்களுக்குக் கணக்கில்லை.
எழுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
42.
தெரிபொறி
முகட்டுக் கவட்டடி யலவன்
சிதைந்திடக் கமடமுள் ளழுந்த
வரிவளை
நெரிய வலம்புரிக் குலத்தின்
வயிற்றிடை கொழுமுகந் தாக்கி
விரிகதிர்த் தரள மணிபல வுகுப்ப
வெருண்மதக் கவையடிப் பேழ்வாய்
நிரைநெறி
மருப்புக் கரும்பக டிணக்கி
நீள்வய லெங்கணு முழுதார்.
22
(இ-ள்) அன்றியும்,
தெரியாநிற்கும் பொறிகளைக் கொண்ட உச்சியையும் பிளந்த பாதங்களையுமுடைய நண்டுகளானவை
சிதையவும், ஆமைகள் உள்ளே அழுந்தவும், இரேகைகளையுடைய சங்குகள் நெரியவும், வலம்புரிக்
கூட்டத்தினது வயிற்றின்கண் கொழுவின் முகமானது தாக்கப்பட்டு விரிந்த பிரகாசத்தையுடைய பல
முத்துமணிகளைச் சிந்தவும், வெறியினது மதத்தைப் பெற்ற பிளவுற்ற பாதங்களையும் பிளந்த
வாயையும் வரிசையாக நெறித்தலைக் கொண்ட கொம்புகளையுமுடைய கரிய எருதுகளைச் சேர்த்து நீண்ட
வயல்களெவ் விடத்து முழுதார்கள்.
43.
முள்ளரைப்
பசுந்தாள் வட்டிலைக் கமல
முகையுடைந் தொழுகுதேன் றெறிப்பக்
கள்ளவிழ்
குவளை யொருபுறஞ் சரியக்
கடிமலர்க் குமுதமு மடிய
|