பக்கம் எண் :

சீறாப்புராணம்

29


முதற்பாகம்
 

        மள்ளர்காற் சேற்றி லிடறிய பதும

             மணியின மலரளி யெழுப்ப

        வெள்ளநீர்ப் பரப்புக் கழனிக டோறு

             மென்கருஞ் சேறுசெய் தனரே.

23

     (இ-ள்) அவ்வாறு உழுது முட்களினது அரையைக் கொண்ட பசிய நாளத்தையும் வட்டமாகிய இலைகளையுமுடைய தாமரைகளின் மொட்டுகளானவை யுடையப் பெற்றுச் சிந்துகின்ற மதுவானது தெறிக்கவும், நறவமானது நெகிழப் பெற்ற குவளைகள் ஒருபக்கத்தில் சாயவும், வாசனை தங்கிய புஷ்பங்களை யுடைய அல்லிகள் இறக்கவும், சேற்றின்கண் உழவர்களின் கால்களில் இடறப் பெற்ற தாமரையினது முத்துக் கூட்டங்களைப் புஷ்பங்களின் தேனானது எழுப்பவும் வெள்ளமாகிய நீரைப் பரப்பிய வயல்கள்தோறும் மெல்லிய கருநிறத்தை உடைய சேற்றைச் செய்தார்கள்.

 

     44. சுந்தரப் பொறியஞ் சிறையறு காலே

             ழிசையளி தொகுதியிற் கூடி

        மந்தர மனைய தருவின்மேல் வீழ்ந்து

             வாய்விட முழங்கிய வோதை

        கொந்தெறி கமலங் குமுதஞ்செங் கழுநீர்

             குடியொடு மடிந்தன வினிமே

        லந்தர மலது வேறிட மிலையென்

             றழுகுரன் மயங்குவ போலும்.

24

     (இ-ள்) அன்றியும், அழகிய புள்ளிகளையும், செவ்விய சிறகுகளையும், ஆறு பாதங்களையும், ஏழிசைகளையுமுடைய வண்டுகளானவை கூட்டமாய் ஒன்றுசேர்ந்து மலைகளையொத்த சோலைகளின் மீது விழுந்து தங்களின் வாய்விடும் வண்ணம் சத்தித்த ஓசையானது, பூங்கொத்துக்களை வீசுகின்ற தாமரை, அல்லி, குவளையாகிய இவைகள் குடியோடும் மாண்டன. இனிமேல் நமக்கு ஆகாயமல்லாது வேறே தங்குதற்கு இடமில்லையென்று சொல்லி அழாநிற்கும் ஓசையினால் மயக்க மடைவனவற்றை நிகர்க்கும்.

 

     45. சுரும்பின மிருந்து தேனுண்டு தெவுட்டிச்

             சுருதிசெய் பன்மலர் சிறந்த

        விரும்படி கிடங்கிற் கிடந்துமூச் செறிந்த

             வெருமையின் கவையடிப் பரூஉத்தா

        ணிரம்பிடப் பதிந்த சலஞ்சலத் தரள

             நீணிலா வெறிப்பது நிறைந்த

        கரும்பொறிக் கவைநாத் துளையெயிற் றரவு

             கவ்விய கதிர்மதி போலும்.

25