முதற்பாகம்
(இ-ள்) அன்றியும்,
வண்டின் கூட்டங்கள் தங்கி மதுவையருந்திக் கொப்பளித்துக் கீதத்தைச் செய்யுகின்ற பல
புஷ்பங்கள் சிறக்கப் பெற்ற பெரிய பூமியையுடைய தடாகங்களில் கிடந்து சுவாசத்தை வீசிய
எருமைகளின் பிளந்த பாதத்தினது பருத்த காற்களில் நிரம்பும் வண்ணம் அழுந்திய சங்குகளின்
முத்தமானது நீண்ட நிலவை வீசுவது, கரிய புள்ளிகளையும் பிளவுற்ற நாக்கையும் துவாரத்தைக் கொண்ட
பற்களையு முடைய சர்ப்பமானது கடித்துப் பிடித்த கிரணங்களினது சந்திரனை நிகராநிற்கும்.
46.
கலன்பல
வணிந்து தொண்டியுண் டெழுந்து
கதிரவன் றனைக்கையாற் றொழுது
குலந்தரு
தெய்வ வணக்கமுஞ் செய்து
குழுவுட னுழுநர்கள் கூண்டு
நிலந்தனை
வாழ்த்தி வலக்கரங் குலுக்கி
நென்முளை சிதறிய தோற்றம்
பொலன்பல
சிறப்ப விடனற நெருங்கிப்
பொன்மழை பொழிவது போலும்.
26
(இ-ள்) அன்றியும், உழவர்கள்
தங்களின் கூட்டத்தோடும் திரண்டு பல ஆபரணங்களைத் தரித்து மதுவைக் குடித்து எழும்பிக்
கைகளினால் சூரியனை வணங்கித் தங்கள் குலத்திற் கொடுத்த தெய்வத்தினது பணிதலையு மியற்றிப்
பூமியைத் துதித்து வலதுகையைக் குலுங்கச் செய்து நெல்லினது முளைகளைச் சிந்திய தோற்றமானது
பலவித அழகுகள் சிறக்கும்படி இடமில்லாது செறிந்து பொன்னினாலான மழையைப் பொழிவதைப்
போலநிற்கும்.
47.
படர்மருப்
பெருமைக் குடம்புரை செருத்தற்
பருமுலைக் கண்டிறந் தொழுகி
நடைவழி
சொரியு மமுதமும் வாழை
நறுங்கனி யுகுத்தசெந் தேனு
முடைபடு
பனசப் பசுங்கனிச் சுளையி
லூற்றிருந் தோடிய தேனுங்
கடிமலர்
போர்த்த வரம்பினைத் தகர்த்துக்
கழனியிற் பரந்துபாய்ந் துடைக்கும்.
27
(இ-ள்) அன்றியும், படர்ந்த
கொம்புகளையுடைய எருமைகளின் கும்பத்தை நிகர்த்த மடியின் பருத்த முலைகளினது சிலீமுகங்களானவை
திறக்கப் பெற்று வழிந்து நடையினது பாதைகளில் சிந்திய அமுதமும், வாழை மரத்தினது நறிய
செந்நிறத்தை யுடைய பழங்கள் சிந்திய நறவமும், பால மரத்தினது
|