முதற்பாகம்
தகர்ந்த பசிய
பழங்களினது சுளைகளின் ஊற்றாகத் தங்கியோடிய நறவமும், வாசனையமைந்த புஷ்பங்களினால்
மூடப்பெற்ற வரப்புகளைப் பொடித்து வயல்களில் பரவிச் சாடி உடைய நிற்கும்.
48.
அருமறை
நெறியும் வணக்கமுங் கொடையு
மன்புமா தரவுநல் லறிவுந்
தருமமும்
பொறையு மிரக்கமுங் குணமுந்
தயவுசீ ரொழுக்கமு முடையோர்
பெருகிய
செல்வக் குடியொடு கிளையும்
பெருத்தினி திருந்துவாழ் வனபோன்
மருமலர்ப்
பழனக் காடெலா நெருங்கி
வளர்ந்தது நெட்டிலை நாற்றே.
28
(இ-ள்) அன்றியும், அருமையான வேதத்தினது சன்மார்க்கத்தையும், தொழுகையையும், ஈகையையும்,
அன்பையும், ஆதரவையும், நல்ல ஞானத்தையும், தருமத்தையும், பொறுமையையும், இரக்கத்தையும்,
குணத்தையும், தயவையும் சிறப்பினைக் கொண்ட ஒழுக்கத்தையு முடையவர்கள் அதிகரித்த தங்களின்
செல்வத்தைப் பெற்ற குடியுடன் குடும்பமும் பெருக்கமுற்று இனிமையோடும் தங்கி வாழ்வனவற்றைப்
போலும் வாசனையைக் கொண்ட புஷ்பங்களை யுடைய அந்த வயற் காடுகளெல்லாவற்றிலும் நெடிய
இலைகளின் நாற்றானது செறிந்து வளர்ந்தது.
49.
கோதற
வெழுந்த நாற்றினைப் பறித்துக்
குவித்திடு முடியிட மடுத்துத்
தீதுறுங்
கருங்கட் செய்யவாய் வெண்பற்
சிற்றிடைக் கடைசியர் வாரிப்
பூதர மனைய
சுணங்கணி முலையிற்
புள்ளியிற் சேதகம் போர்ப்ப
வாதரம்
பெருகி நிரைநிரை வடிவா
யணியணி நாற்றினை நடுவார்.
29
(இ-ள்) அவ்வாறு களங்க மற
வளர்ந்த நாற்றைப் பறித்துக் குவிக்கும் முடியினது தானத்தைத் தீமை பொருந்திய கண்களையும்,
சிவந்த வாயையும், வெள்ளிய பற்களையும், சிறிய மருங்குலையுமுடைய உழத்தியர்கள் நெருங்கி
ஆசையான ததிகரிக்கப் பெற்று அந்நாற்றைக் கைகளினால் அள்ளி மலைகளை யொத்த தேமலையுடைய
அழகிய முலைகளில் புள்ளிகளை நிகர்த்துச் சேறானது மூடிக்கொள்ளச் செம்மையாய் வரிசை
வரிசையாகவும் ஒழுங்கொழுங்காகவும் நடுவார்கள்.
|