பக்கம் எண் :

சீறாப்புராணம்

293


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் வாட்டமுறவே அழகையும் சத்தியத்தையுமுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் நித்திரை செய்கின்ற அவ்விடத்தில் அவர்களின் சொப்பனத்தில் ஜிபுறீல் அலைகிஸ்ஸலாமவர்கள் வானலோகத்தை விட்டும் இறங்கிவந்து சேர்ந்து இந்த அந்தகாரமொழியும்படி சூரியனுதையமான பின்னர் நீங்கள் எழும்பி உங்களின் முன்னால் ஒரு மானானது தோன்றிடும். அப்பாதையின் வழியாக யாவர்களையும் நடத்துங்களென்று சொன்னார்கள்.

 

     743. மனமுறைச் சபுறயீல் வந்து சொல்லிய

        கனவினைக் கண்டகங் களித்துக் கண்ணிணை

        யினைவிழித் தெழுந்தன ரெழுந்த காலையிற்

        றினகர னெழுந்தனன் பரந்த செங்கதிர்.

21

     (இ-ள்) அவ்வாறு ஜிபுறீல் அலைகிஸ்ஸலாமவர்கள் வந்து சொன்ன மனசின்கண் தங்காநிற்கும் சொப்பனத்தைப் பார்த்து மனமகிழ்ச்சி கொண்டு இரண்டு கண்களையுந் திறந்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் எழும்பினார்கள். அங்ஙன மெழும்பிய சமயத்தில் சூரியனும் கீழ்பாற்கடலின்கண் உதயமாயினான். சிவந்த கிரணங்கள் எவ்விடமும் பரவின.

 

     744. வரைபுரை புயமுகம் மதுமன் மாவொடு

        நிரைநிரைத் தொறுவையு நடத்தீர் நீவிரென்

        றுரைசெய்து பெருக்கெடுத் தோங்கு மானதிக்

        கரையினின் மரைமலர்க் காலி னேகினார்.

22

     (இ-ள்) அப்பொழுது மலைகளுக்கொப்பாகிய தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் நீங்களனைவர்களும் பொருந்திய குதிரைகளுடன் வரிசை வரிசையாகிய ஒட்டகங்களையும் நடத்திக் கொண்டு வாருங்களென்று சொல்லிவிட்டுப் பிரவாகமெடுத்தோங்கா நிற்கும் அப்பெரிய ஆற்றினது கரையின்கண் தங்களது தாமரை மலர் போன்ற பாதங்களினால் நடந்து போயினார்கள்.

 

     745. ஒட்டகம் புரவிமற் றுள்ள பேர்களு

        மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிடத்

        தொட்டவெண் டிரைக்கட லகடு தூர்த்திட

        முட்டிய புனனதிக் கரையின் முன்னினார்.

23

     (இ-ள்) அவ்வாறு அவர்கள் போக ஒட்டகம் குதிரை முதலிய மற்றும் மிருகங்களையுள்ள யாவர்களும் தங்களது அளவில்லாத சரக்குகளோடும் பொலிவுற்று விளங்கும்படி தோண்டிய