முதற்பாகம்
(இ-ள்) நீ
இந்தநாள் தொடுத்து இவ்விடத்திலுள்ள இந்தப் பாதையின்கண் இருந்து உயிர்வதை செய்வது உனக்கு
நல்லதல்ல. ஆதலால் இதைவிட்டும் வேறேயொரு காட்டிற்குப் போய்ச் சேருவாயாக வென்று சொல்லிய
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வாசனை நெருங்கிய தாமரைப் பூப்போலும்
பாதங்களை அப்புலியானது வணங்கி நல்லது நல்லது என்று சொல்லிப் புகழ்ந்து கொண்டு நடந்து
அவ்விடத்தைவிட்டும் நீக்கிப் போயினது.
767.
படுகொ லைப்புலி
மெய்யுறப் பணிந்திவர் பாதத்
தடிவ ணங்கிய காரண
வதிசய மதனா
லுடைய வன்றிருத்
தூதரே யுண்மையென் றுன்னித்
தினமு டைத்தநெஞ்
சாயின ரறிவினிற் றெளிந்தோர்.
14
(இ-ள்)
அப்போது மிகுந்த கொலைத் தொழிலையுடைய அப்புலியானது சரீரம் பொருந்தும்படி நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் பாதத்தின்கீழ் வணங்கிய காரணத்தின் அற்புதத்தினால்
அறிவினாற் தேர்ச்சியுற்ற சிலபேர்கள் இவர் உண்மையாக யாவற்றிற்குஞ் சொந்தக்காரனான
அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் அழகிய றசூல்தானென்று நினைத்து வலிமைதங்கிய மனசை
உடையவர்களாயினார்கள்.
|