பக்கம் எண் :

சீறாப்புராணம்

312


முதற்பாகம்
 

797. கருந்தடங் கவிகை வள்ளல் வரவுகண் களித்து நோக்கி

    யருந்தவம் பெற்றே னின்றென் றருகிருந் தவனைக் கூவி

    விருந்திவ ணருந்தி நந்தந் துடவையில் விடுதி யாக

    விருந்தவ தரித்துப் போமி னெனவெடுத் தியம்பு கென்றான்.

12

     (இ-ள்) அன்றியும், விசாலித்த கரியநிறத்தைக் கொண்ட மேகக்குடையையுடைய வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வருகையைக் கண்களினாற் பார்த்து மகிழ்ச்சியடைந்து யான் இன்றையதினம் அரிதான தவத்தைப் பெற்றேனென்று சொல்லித் தனது பக்கத்திலிருந்த ஒரு வேலையாளனைக் கூப்பிட்டு நம்முடைய சோலையின்கண் விடுதியாகத் தங்கியிருந்து இவ்விடத்தில் விருந்துண்டு போகுங்களென்று அப்பாதை யோர்களுக்கு எடுத்துச் சொல்லுவாயாகவென்று கட்டளை செய்தான்.

 

798. என்றவ னுரைப்பக் கேட்டங் கெழுந்தனன் பாதை யோர்முன்

    சென்றனன் விரைவின் வந்த தேசிகர் தம்மை நோக்கி

    மின்றவ ழலங்கல் வேலிர் சோலைவாய் விடுதி யாகிச்

    சொன்றியுண் டெழுக வென்னச் சொல்லினன் முதியோனென்றான்.

13

     (இ-ள்) என்று அவ்விசுறாவென்பவன் கூற அவ்விடத்திலிருந்த வேலையாளன் தனது காதுகளினாற் கேள்வியுற்று எழும்பி அங்குவராநின்ற பாதையோர்களின் முன்னர் விரைவாகப் போய் தனக்கு எதிரில் வந்த அத்தேசாந்தரிகளாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முதலிய வியாபாரிகளைப் பார்த்து பிரபையானது தவழாநிற்கும் மாலைசூடிய வேலாயுதந் தாங்கிய கையையுடையவர்களே! நீங்கள் எங்களது சோலையினிடத்தில் விடுதியாக இறங்கியிருந்து விருந்தாக அன்னமருந்திப் பின்னர் எழும்பிப் போகுங்களென்று முதியவனான இசுறாவென்னும் பண்டிதன் சொன்னானென்று சொன்னான்.

 

799. விருந்தெனு மாற்றங் கேட்டு மெய்மகிழ்ந் தாகம் பூரித்

    திருந்தனர் விரிந்த காவி லிடபமத் திரிமா வெல்லா

    மருந்தின குளகு நீருண் டவ்வயி னுறைந்த பின்னர்

    திருந்திய பண்ட மியாவுஞ் செறித்தொரு புறத்திற் சேர்த்தார்.

14

     (இ-ள்) அவன் அவ்வாறு விருந்தென்று சொல்லும் வார்த்தையைத் தேசாந்திரிகளாகிய அவ்வியாபாரிகளனைவரும் தங்களது காதுகளினாற் கேள்வியுற்று மனமகிழ்ச்சி யடைந்து சரீரம்