முதற்பாகம்
மவர்களின்
கீர்த்தியைப் பாட அப்பாட்டுக் கிசைந்து மகிழ்ச்சி கொண்ட மயிலினங்கள் தங்களது
பச்சைநிறத்தையுடைய கிரணங்களை விட்டு ஓங்காநின்ற அழகிய சிறகுகளை விரித்து நீட்சி பெற்ற
கரைகளில் நிற்கும் விருட்சங்களின் நிழல்களில் ஆடாநிற்கும்.
803.
மடலவிழ் வனசவாவி
வைகையம் பதிக்கு வேந்த
னடலுறை யபுல்கா
சீம்த னருங்குடிச் செல்வம் போலப்
புடைபரந் தலர்கள்
சிந்திப் பொங்குதேன் கனிக டூவிச்
சுடரவன் கதிர்க
டோன்றாச் சோலைவாய் விளங்கிற் றன்றே.
18
(இ-ள்)
அன்றியும், மடல்க ளவிழாநிற்கும் தாமரைத் தடாகங்களையுடைய அழகிய வகுதை நகருக்கு அரசரான
வலிமை தங்கிய அபுல்காசீ மரைக்காயரென்னும் இந்நூலிற்கு உதாரநாயகரவர்களின் அரிதான வீட்டினது
செல்வத்தைப் போலப் பக்கங்களிற் பரவிப் புஷ்பங்களைச் சிதறி மதுவானது பெருகுகின்ற பழங்களை
நானாபக்கமும் பொழிந்து சூரியனது கிரணங்களுந் தெரியாது கிளைகளினால் நெருக்கமுற்று
அச்சோலையின் இடமுழுவதும் பிரகாசித்தது.
804.
மருப்பபுகுஞ் சோலை
வேலி நீழலில் வரவு மொட்டார்
நெருப்புநீ ருப்பென்
றாலு நினைத்தெடுத் தளிக்கி லாதார்
பொருப்பென
வுயர்ந்த செந்தேம் பொழிலிடைப் புகுந்து நந்தம்
விருப்பொடு
மிருப்பச் செய்தார் முகம்மதின் வியப்பீ தென்பார்.
19
(இ-ள்)
அப்போது அங்குற்ற வியாபாரிகள் மரக்கொம்புகளை நானாபக்கமும் விட்ட இந்தச் சோலையினது
வேலியின் நிழலில் இதற்குச் சொந்தக்காரரான பண்டிதன் முதல்பேர் அன்னியர்களை வரவானாலும்
சம்மதிக்க மாட்டார்கள். தீ ஜலம் உப்பு இவற்றில் எதையாவது கேட்டாலும் எடுத்துக் கொடுக்க
எண்ணவு மாட்டார்கள். அவ்விதமிருக்க நாமனைவோரும் மலையைப்போல வளர்ந்த சிவந்த மதுவைப்
பொழியாநிற்கும் இந்தச் சோலையின்கண் ணுழைந்து நம்முடைய பிரியத்துடன் இருக்கும்படி
செய்தார். ஆனதினால் இஃது நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் அதிசயமென்று
அவ்வர்த்தகர்கள் ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்ளுவார்கள்.
805.
சீதநீர் குடைவா
ராடிச் செழும்பொழின் மலர்கள் கொய்வார்
கோதறு கனிக
டுய்ப்பார் கொழுந்தழை விலங்குக் கீய்வார்
போதினி லமளி
செய்வார் பூத்தொடுத் தணிந்து கொள்வார்
மாதவர் முகம்ம
திங்ஙன் வரப்பெறும் பலனீ தென்பார்.
20
|